Published : 22 Nov 2018 09:51 AM
Last Updated : 22 Nov 2018 09:51 AM

சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆந்திர முதல்வராவேன்: நடிகர் பவன் கல்யாண் நம்பிக்கை 

 

ஆந்திராவில் 2019 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராவேன் என தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் நிறுவன தலைவருமான பவன் கல்யாண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல் யாண், கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங் கினார். கடந்த நாடாளுமன்ற தேர்த லில் ஆந்திராவில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதர வாக பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நாடுமுழுவதற்குமான தனது அரசி யல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் நேற்று அவர் தொடங்கினார்.

இது தொடர்பாக அவர்செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நம் நாட்டில் கடந்த 20 ஆண்டு களாக தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படு கின்றன. தென்மாநிலங்களில் இருக்கும் மக்களின் உரிமைகள் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் மக்களுக்கு தங்களது பணிகளை அர்ப்பணிக் கும் அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக எனது அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் தொடங்கியுள்ளேன். விரைவில் மற்ற மாநிலங்களிலும் கூட்டங்கள் நடத்துவேன். அதன் பிறகு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவேன்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட் டது. தற்போது அவர் 3-வது அணி அமைக்க அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து வருவது சந்தர்ப் பவாத அரசியலாகும். 2019-ல் நடை பெறும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தனித்து போட்டியிடுவேன். மேலும், அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடக் கும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான் முதல்வரா வேன். அதன்பிறகு, தென்மாநிலங் களை ஒருங்கிணைக்கும் முயற்சி யில் ஈடுபடுவேன். தமிழகத்தில் ரஜினி, கமல் ஆகியோர் அரசிய லுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு என் தேவை ஏற்பட்டால், நான் அவர்களுடன் இணைந்து பணி யாற்றுவேன். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x