

பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
பசுமைப் பட்டாசு, குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிகள், பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் தடை செய்யப்படும். இந்த உத்தரவை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பேரியம் உப்புகள் மீது விதிக் கப்பட்ட தடையால் 60 சதவீத அளவுக்கும், சரவெடிகள் மீதான தடையால் 20 சதவீத அளவுக்கும் பட்டாசு உற்பத்தியில் இழப்பு ஏற்படும். பசுமைப் பட்டாசுதான் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் 100 சதவீத அளவுக்கு பட்டாசு தயாரிக்க முடியாத நிலை ஏற்படும். பட்டாசுகள் மீதான கட்டுப்பாட்டால் விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடும் நிலை உருவாகும்.
எனவே, தமிழக அரசு சுற்றுச் சூழல் அமைச்சகத்தை அணுகி, சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆவன செய்ய வேண்டும். பட் டாசு தொழிலையும், அதன் தொழி லாளர்களையும் பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டப்பேர வையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் பட்டா சுத் தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்து, பட்டாசு வணிகர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.