

நாமக்கல்
ஈரோடு தொழிலதிபரை காரில் கடத்தி வந்த கும்பலை ராசிபுரம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தொழிலதிபரை மீட்ட போலீஸார், கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல் (50). ரியல் எஸ்டேட் உட் பட வேறு சில தொழில்களும் செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி காலை நடைபயிற்சிக்காக சென்ற இவரை மர்ம நபர்கள் காரில் கடத்தியுள்ள னர். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவ தாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து சக்திவேல் குடும் பத்தினர் ரூ.5 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். இதையேற்ற கும்பல் சேலம் அருகே அரியானூரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். மேலும், கடத்தல் சம்பவம் தொடர்பாக ஆப்பக்கூடல் போலீஸில் சக்திவேல் குடும்பத்தி னர் புகார் செய்தனர். போலீஸாரின் அறிவுறுத்தல்படி நேற்று முன்தினம் இரவு பணத்தை ஒப்படைக்க அரியானூரில் அவர்கள் நின்றிருந் தனர். அப்போது காரில் வந்த கும் பல் மாறுவேடத்தில் போலீஸார் இருப்பதை அறிந்து தப்பினர். போலீ ஸார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி எனும் இடத்தில் சென்றபோது இரவு 9 மணியளவில், அவர்களது காரை போலீஸார் சுற்றி வளைத்தனர். தப்ப முடியாது என எண்ணிய கும்பல் வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்க ளால் தாக்க முயன்றனர். அவர்களை எச்சரித்த போலீஸார், வானத்தை நோக்கியும், கார் கண்ணாடியி லும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த கும்பல் 2 குழுக்களாக பிரிந்த தப்பினர்.
இதற்கிடையே, சுற்றுவட்டார போலீஸார் வரவழைக்கப்பட்டு கிரா மத்தினர் உதவியுடன் தலைமறை வான நபர்களை தேடினர். இதில், 2 பேரை விரட்டி்ப் பிடித்தனர். அவர் கள், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இளங்கோவன் (37), வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பிரேம் குமார் (25) எனத் தெரியவந்தது. மேலும், ஈரோடு ஆப்பக்கூடலில் நடராஜ் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நாமக்கல் எஸ்பி அர. அருளரசு கூறும்போது, "சக்திவேல் நாள்தோறும் 25 பவுன் நகை அணிந்த படி வெளியே செல்வதை நோட்ட மிட்ட அதே பகுதியைச் சேர்ந்த நட ராஜ், கூட்டாளிகளுடன் சேர்ந்து சக்தி வேலை காரில் கடத்தினார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரைப் பிடிக்க ஈரோடு போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
சக்திவேலை, நாமக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு அந்த கும்பல் காரில் சென்றுள்ளது" என்றார்.