திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? - கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? - கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்
Updated on
1 min read

திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று என்னைச் சந்தித்தார். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். ஏற்கெனவே, மதிமுக நடத்திய மாநாட்டில் எங்கள் கட்சிப் பொருளாளர் கலந்துகொண்டார். அடுத்த மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. அதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நானும் வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். எனவே, எங்களுடைய கூட்டணியிலே இவ்வளவு அக்கறை எடுத்து பேசிப் பேசியே எங்களுக்கு விளம் பரம் கொடுத்து பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள். அதற்காக ஊடகத் துறைக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் கட்டப்பட இருக்கும் புதிய அணையை எதிர்த்து திமுக சார்பில் நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர் களோடு கலந்துபேசி இதுகுறித்து என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியால், முறையாக அணுகாத காரணத்தினால் இந்த அணைப்பிரச் சினை இப்போது வந்திருக்கிறது. இது குறித்தும் விவாதிக்க இருக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத் தில் பிரச்சினை வராமல் இருப்ப தற்கு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒரு வலுவான தீர்மானம் நிறை வேற்றி, அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார் பில் சட்டப்பேரவையிலும் மக்கள் மன் றத்திலும் நான் பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in