

மின் கம்பம், மின்வழித் தடங்கள், மின் மாற்றிகள், துணைமின் நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு புயலால் ஏற்பட்ட சேதம் ரூ.1,500 கோடி என முதல்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘கஜா’ புயல் காரணமாக நாகப் பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், கடலூர், ராமநாத புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட் டங்களில் மின்வழித் தடங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், துணைமின் நிலையங்கள் ஆகி யவை சேதமடைந்துள்ளன. இதன் படி, உயரழுத்த மின்கம்பங்கள் 27,756, தாழ்வழுத்த மின்கம்பங்கள் 79,112 என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 868 கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அதேபோல், 876 மின்மாற்றிகளும், 4,286 கி.மீ. நீளத்துக்கு மின்கம்பிகளும், 201 துணைமின் நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1,500 கோடிக்குமேல் இருக்கும் என முதல்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புப் பணிகளுக் காக தமிழக அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது. புயலால் சேதம் அடைந்த 201 துணைமின் நிலையங் களில் 95 சதவீத மின்நிலையங்கள் சீரமைக்கப்பட்டு விட்டன. சீரமைப்புப் பணிகளில் 21,500 மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைத் தவிர, கேரளாவில் இருந்து 500 ஊழியர்களும், ஆந்திராவில் இருந்து ஆயிரம் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் முறையே நாகப் பட்டினம், புதுக்கோட்டை மாவட் டங்களில் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். சேதம் அடைந்த மின் கம்பங்களுக்குப் பதிலாக, வௌி மாநிலங்களில் இருந்து 70 ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.