

பெரம்பலூரை அடுத்த ஈச்சம்பட்டி அருகே வியாழக்கிழமை இரவு தனியார் பேருந்தில் பெட்ரோல் குண்டு வெடித்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்திலிருந்து அரியலூர், பெரம்பலூர் வழியாக திருச்சி மாவட்டம் துறையூர் செல்லும் தனியார் பேருந்து பெரம்பலூரை அடுத்த ஈச்சம்பட்டியை வியாழக்கிழமை இரவு 8.05 மணிக்கு கடந்தபோது பெட்ரோல் குண்டு வெடித்ததாக தகவல் பரவியது. மேலும் பேருந்து பயணிகள் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. துணிக்கடையில் வழங்கப் படும் கட்டைபையில் இருந்த, குளிர்பான பிளாஸ்டிக் பாட்டி லில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண் ணெய் மற்றும் இன்ஜின் ஆயில் கலவையுடன், பாட்டிலுக்கு வெளியே சிறிதளவு டெட்டனேட்டர், பேட்டரி, கையடக்க சர்க்யூட் போர்டு ஆகியவற்றைகொண்டு பிணையப்பட்ட வெடிப் பொருளே பேருந்தில் வெடித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பேருந்தின் டயர் டியூப் வெடித்தது போன்ற சப்தமும் தொடர்ந்து ஓட்டுநரின் பின்புறத் திலிருந்து நான்காவது இருக் கையின் முதல் நபர் அமரும் இடத்தின் அடியிலிருந்து புகைபோல எழும்பியதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
டெட்டனேட்டர் தவிர ஏனையவை மட்டுமே வெடிப்புக் குள்ளானதால், குறைவான சேதம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே 70 பேருக்கு மேல் பயணம் செய்த பேருந்தில் வெடிபொருள் வைக்கப்பட்ட இருக்கை யில் அமர்ந்திருந்த மற்றும் அருகே நின்றுகொண்டிருந்த பயணி களுக்கு மட்டும் கால்களில் காய மேற்பட்டுள்ளது.
காயமடைந்த 10 பேரில் 3 பேர் வியாழக்கிழமை இரவு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மற்றவர்களில் துறையூர் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 6 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெட்டனேட்டர் வெடித்த இருக்கையில் அமர்ந்திருந்தும் முன்னெச்சரிக்கையால் காயத்தி லிருந்து தற்காத்துகொண்ட கண்ணன் என்பவர் போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவரை பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவருடன் இணையாக துறையூருக்கு பயணச்சீட்டு பெற்ற மற்றொரு நபரும் விசாரணை வளையத்தில் உள்ளார். சம்பவ இடத்தில் வெடிக்காத டெட்டனேட்டர் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையடை யாத வெடி ரகத்தை பேருந்து மூலமாக கொண்டு செல்லும் போது, அடுத்தடுத்த வேகத்தடை குலுங்கலில் அது வெடித்திருப் பதாக கூறப்படுகிறது.
எனினும் சம்பவத்தின் பின்னணி, முன் திட்டம், சுதந்திர தினத்துக்கும் இதற்கும் தொடர்புண்டா அல்லது தனிப்பட்ட தாக்குதலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மையமாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் மற்றும் விசாரணை குறித்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சோனல் சந்த்ராவிடம் கேட்டபோது, ‘5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்துக்கான முகாந்திரம், பின்னணி குறித்து விரைவில் முழு விவரமும் தெரியவரும்’ என்றார்.