Published : 08 Nov 2018 09:23 AM
Last Updated : 08 Nov 2018 09:23 AM

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரிப்பு 

தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறையின் போது மதுபான விற்பனை ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. இதில் 2 நாட்களில் மட்டும் ரூ.330 கோடிக்கு மதுவகைகள் விற்பனை யாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டா ரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பது வழக்கம். பொதுவாக தினசரி ரூ.80 முதல் ரூ.110 கோடி வரை மதுபானங்கள் விற்கப்படும். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இந்த விற்பனை இரு மடங்காகவும் வாய்ப்புள்ளது.

ஆண்டுதோறும் ரூ.22,000 கோடி

தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களுக்கு முன் 7 ஆயிரமாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரமாக குறைந்து விட்டது. அதே நேரத்தில் மதுபானத் தின் விலை கடந்தாண்டு உயர்த் தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்தாலும், வருவாய் வழக் கத்தை விட அதிகரித்தே காணப் படுகிறது. இதனால், ஆண்டு தோறும் ரூ.22 ஆயிரம் கோடிக்கும் மேல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி தீபாவளிக்கு முன்தின மான, நவம்பர் 5-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முன்னதாக நவம்பர் 3, 4 ஆகிய 4 தினங்களும் அரசு விடுமுறை என்பதால், தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

இந்த 4 நாட்களிலும் டாஸ்மாக் மதுபான விற்பனை நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்களிலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. இதன் தாக்கமாக, தீபாவளியன்று மட்டும் ரூ.180 கோடிக்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக, டாஸ் மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தீபாவளிக்கு முன்தினமான திங்கள்கிழமை ரூ.150 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை ரூ.148 மற்றும் சனிக்கிழமை ரூ.124 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு விற்பனை குறைவு

இதன்மூலம் கடந்தாண்டு விற்ப னையைக் காட்டிலும் 30 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித் தன. இந்தாண்டை பொறுத்தவரை, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய தின விற்பனைக்காக ரூ.350 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப் பட்ட இலக்கை காட்டிலும், ரூ.20 கோடி குறைந்து ரூ.330 கோடி அளவுக்கு விற்பனையாகி யுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தை பொறுத்தவரை, தமிழகம் 38 மாவட் டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து விற்பனை விவரங்கள் தொகுக்கப்பட்டபின், இறுதி விற்பனை நிலவரம் கிடைக்கும். எனவே, டாஸ்மாக் மதுபான விற்பனையானது ரூ.350 கோடியை விட தாண்டும் என்றே டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பீர் விற்பனை குறைவு

வழக்கமாக பண்டிகை காலங் களில் பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால், இந்தாண்டு தொடக்கத்தில் பீர் விலை ரூ.10 வரை அதிகரிக்கப்பட்ட நிலை யில், தற்போது பீர் விற்பனை சற்றே சரிந்துள்ளதாக கூறப்படு கிறது. அதேநேரம் மற்ற மது பான வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை

இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “ஆண்டுதோறும் மதுபான விற்ப னைக்கு இலக்கு நிர்ணயிக்கப் படுவதில்லை. இந்தாண்டு வழக் கத்தை விட அதிகளவில் விற்பனை யாகியுள்ளது.

இன்னும் பல மாவட்டங்களில் இருந்து இறுதி நிலவரம் கிடைக்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் இன்றுதான் இறுதியாக 4 நாட்களில் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்பது தெரியவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x