Published : 18 Nov 2018 10:33 AM
Last Updated : 18 Nov 2018 10:33 AM

குடிநீர் பிரச்சினையை தீர்க்க புயல் வருவதும் நல்லதுதான்: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கருத்து

 ‘‘அடுத்து அடுத்து புயல் வந்தால்தான் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’’ என வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் நேற்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் குமரன் பூங்காவில் மரங்கள் விழுந்து சேதமடைந்திருப்பதை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த மாதிரி தற்போது தண்ணீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் அணை நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்துள் ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க் கால அடிப்படையில் நடை பெறுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மின்விநியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் வழங்கப்படும்.

புயல் வருவது நல்லதுதான். அடுத்தடுத்து புயல் வந்தால் தான் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்றார்.

அப்போது திண்டுக்கல் நகரில் கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா, திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்றுமுன்தினம் இரவு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘திண்டுக்கல் குடிநீர் பிரச்சினை இந்தப் புயலால் தீரும். எனவே இன்னும் பத்து புயல் வந்தாலும் நல்லது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x