Published : 29 Nov 2018 08:44 AM
Last Updated : 29 Nov 2018 08:44 AM

விசைப்படகுகளை கட்டிவைக்க வசதியில்லை: அக்கரைப்பேட்டை மீனவர் குற்றச்சாட்டு

அக்கரைப்பேட்டை புதிய மீன் இறங்குதளத்தில் விசைப்படகு களைக் கட்டுவதற்கான வார் (சிமென்ட் தூண்)அமைக்காததால் தான், விசைப்படகுகள் அரை கி.மீ. தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டன என்று அக்கரைப் பேட்டை மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாகை ஒன்றியம் அக்கரைப் பேட்டை மீனவ கிராமத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மீன்பிடி தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள இக் கிராமத்தில் 275 விசைப்படகுகள், 168 பைபர் படகுகள், 26 கட்டுமரங் கள் உள்ளன. கடந்த 16-ம் தேதி கரை கடந்த கஜா புயலால் அக்கரைப்பேட்டை மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீள அரசின் உதவியை எதிர்பார்த் துள்ளனர்.

அக்கரைப்பேட்டை மீனவ கிரா மத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சேதங்கள் தொடர்பாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறிய தாவது:

“எங்கள் கிராமத்தில் உள்ள 12 விசைப்படகுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. மீதமுள்ள விசைப்படகுகள் பகுதி அளவுக்கு சேதமடைந்துள்ளன. பைபர் படகு களும், கட்டுமரங்களும் முழுமை யாக சேதமடைந்துள்ளன. குடிசை கள், ஓட்டு வீடுகள் என 250 வீடுகள் சேதமடைந்துள்ளன. படகு, வலை கள், வீடுகள் என எதையும் இது வரை மீன்வளம், வருவாய்த் துறையினர் கணக்கெடுக்க வில்லை. கணக்கெடுக்காமல் எப்படி நிவாரணம் வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

உண்மை நிலையை கணக் கில் கொண்டு 12 விசைப்படகு களுக்கும் முழு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மீன் இறங்குதளத்தில் கடந்த 2009-2010-ல் திமுக ஆட்சி யில் 900 மீட்டர் நீளத்துக்கு வார் (விசைப்படகுகளைக் கயிற்றால் கட்டுவதற்கான சிமென்ட் தூண் கள்) அமைக்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுக அரசால் அதே நிதியில் 500 மீட்டருக்கு மட்டுமே வார் அமைக்கப்பட்டது. விசைப்படகு களை கட்டிவைப்பதற்கு வழியில் லாததால்தான், விசைப்படகுகள் புதிய மீன் இறங்குதளத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவுக்கு அடித்துச் செல்லப் பட்டன. புதிய மீன் இறங்குதளத்தில் மேலும் 400 மீட்டர் தொலைவுக்கு வார் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x