Published : 08 Nov 2018 08:47 AM
Last Updated : 08 Nov 2018 08:47 AM

80 சதவீத களப்பணியாளர்கள் தயார்; 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உறுதி

20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது பிறந்த நாளை யொட்டி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் பிறந்த நாள் வாழ்த்தை கேட்பதைவிட, தமிழகத்துக்கே ஒரு நல்ல பிறந்தநாளாக விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண் டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முனைப்பில் உள்ளனர். 20 தொகுதிக்கான இடைத்தேர்த லில் கண்டிப்பாக போட்டியிடு வோம். களப்பணியாளர்கள் 80 சதவீதம் தயாராக உள்ளனர். பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தயாராக இருக்கிறோம்

எங்களுடைய தேர்வு முறை யும், நேர்காணல் முறையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும் என்பதால் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்ப் பார்க்கிறோம். எதுவாக இருந்தா லும், நாங்கள் தயாராக இருக் கிறோம்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தேர்தல் முறைகேடாகும். அதனை ஒழிக்க வேண்டும். நான் போகும் இடங்களில், வாக்குறுதிகளை கொடுப்பதில்லை. அவர்களிடம் இருந்துதான் வாக்குறுதிகளை வாங்கிக் கொள்கிறேன். ‘‘நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம். தெரியாமல் தவறு செய்துவிட் டோம். இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டோம்’’ என்று பல ஊர்களில் மக்கள் வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த வாக் குறுதிகளை அவர்கள் நிறைவேற்று வார்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டியது மக்கள்தான். அவர் களுக்காகத்தான் நான் அரசிய லுக்கே வந்தேன். திராவிடக் கட்சிகளுடன் நான் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. அதனை நான் தகவலாகவே பார்க்கிறேன்.

நல்ல தீர்ப்பை தருவார்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை தருவார் கள். நம் நாட்டு அரசியலை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது இன்னொரு நாடான இலங்கை அரசியலை குற்றம் சாட்டக்கூடாது. என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக இலங்கையில் ஜனநாயகம் ஜெயிக்கும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்களுடனான பயணத்தை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறேன். திரும்பி வரும்போது மேலும் நம்பிக்கையுடன் வருவேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி தலைமையில் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கமல் பிறந்த நாள்- தலைவர்கள் வாழ்த்து

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது 64-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்! நலமுடன்!” என்று பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசும் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x