Published : 11 Nov 2018 08:58 AM
Last Updated : 11 Nov 2018 08:58 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிலை திருட்டில் தொடர்பு: வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் குற்றச்சாட்டு

சிலைத் திருட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப் பதாக வழக்கறிஞர் யானை ராஜேந் திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது: 1961-ல் திருடப்பட்டு 1986-ல் அமெரிக்காவில் மீட்கப்பட்ட சிவபு ரம் நடராஜர் சிலை தற்போதுவரை திருவாரூரில் உள்ள சிலைகள் பாது காப்பு மையத்தில் பராமரிப்பின்றி மோச மான நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலும் ஏழைக் கோயில் இல்லை. அவற்றை கட்டும்போதே நிர்வாக செலவுகளுக் காக நிலங்கள், தங்கத்தை தான மாக அளித்துள்ளனர். திருச்சி மாவட் டம் அந்தநல்லூர் அருகே ஆண்டவ நல்லூரில் ராஜராஜசோழனின் தாத்தா அருஞ்சயத்தேவர் என்ற சோழ மன்ன ரின் பெரியப்பா கண்டரத்தேவரால் கட்டப்பட்ட 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய திரு ஆலந்துறை மகாதேவர் கோயிலுக்கு சுமார் 60 ஏக்கர் நிலம், 67.5 கிலோ தங்கம், முள்ளிக் கரும்பூர் கிராமம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல அல்லூர் கிராமத் தில் பராந்தகச் சோழனால் கட்டப் பட்ட பஞ்சநதீஸ்வரம் கோயிலுக்கு 50 கிலோ தங்கம், ஏராளமான ஏக்கர் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இக்கோயில்களுக்குச் சொந்த மான நிலங்களில் இருந்து தற்போ தைய நிலைக்கேற்ற வாடகையை வசூலிக்க வலியுறுத்தி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

சிலை திருட்டு, சிலையை வைத்து லாபமடைந்தவர்களில் அரசியல்வாதி கள் யாரும் இல்லை. இந்நாள், முன்னாள் அமைச்சர்களும் இல்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இணைச் செயலாளர் நிலைக்கு மேலான பதவிகளில் உள்ளவர்கள், கோடீஸ்வரர்களுக்கே அதிக தொடர்பு உள்ளது. இவர்கள் தங்களைப் பாது காத்துக் கொள்வதற்காக, அமைச்சர் களை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர்.

ஐஜி பொன்.மாணிக்கவேல் இந்த மாதத்துடன் ஓய்வுபெற உள் ளார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவருக்கு பணி நீட்டிப்பு பெற முயற்சிப்பேன். இந்த பணியிடத்தில், அமைச்சர் ஒருவரின் உறவினரை நியமித்து, அவர் மூல மாக வழக்குகளை முடிக்க நினைக் கின்றனர். நான் விடமாட்டேன். நீதி மன்றம் மூலம் கேள்வி கேட்பேன்.

கோயில்களில் தற்போதுள்ள நகைகளில் 90 சதவீதம் போலி யானவை. உண்மையான வைரம், ரத்தினங்கள் இல்லை. ஸ்ரீரங்கம் கோயிலில் மிகப்பெரிய தவறு நடை பெற்றுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x