Published : 03 Nov 2018 09:27 PM
Last Updated : 03 Nov 2018 09:27 PM

அமெரிக்காவிலிருந்து முகநூலில் பெண்கள் குறித்து அவதூறு: சென்னை திரும்பிய இளைஞர் கைது

அமெரிக்காவில் இருந்து இணையதளம் மூலம் பெண்கள் குறித்து அவதூறாக பதிவிட்டு வந்த தமிழக இளைஞர் நேற்று தமிழகம் திரும்பியபோது போலீஸார் கைது செய்தனர்.

முகநூல், இணையதளங்களில் போலி ஐடிக்களில் மறைந்துக்கொண்டு ஆபாசமாக, அவதூறாக, தேச நலனுக்கு எதிராக பதிவிடுவோர் தாங்கள் தப்பித்துவிடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் நவீன விஞ்ஞான யுகத்தில் இவர்களை போலீஸார் எளிதாக பிடித்து விடுவார்கள்.

இதே போன்றதொரு நிகழ்வில் பரமக்குடி இளைஞர் அமெரிக்காவிலிருந்து கண்டபடி தனது ஏரியாவில் வசிக்கும் பெண்களைப்பற்றியே அவதூறாக போட தமிழகம் வந்த அவரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

பரமக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சகாயம்(31), அமெரிக்காவில் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றப்பின் கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடி நகரில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களின் குடும்ப பெண்கள் குறித்து அவதூறாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் அவதூறு பரப்பி வந்தார்.

இதைப்பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முகநூலில் தங்கள் ஏரியா பெண்களை குறிவைத்து அவதூறாக ஆபாசமாக பதிவு செய்பவர் நிச்சயம் தங்கள் ஏரியா ஆளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்த பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகார் அளித்து இரண்டு ஆண்டுகளாகியும் ஆள் யார் என தெரியாமல் போலி முகவரியில் இருந்த நபர் சகாயம் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரைப்பற்றிய தகவல் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞர் சகாயம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அவரை பிடிக்க வியூகம் வகுத்தனர். சென்னை வந்தால் சிக்கிக்கொள்வோம் என ரகசியமாக பெங்களூரு வந்து இறங்கிய அவரை அதிகாரிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை பரமக்குடி அழைத்துவந்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x