Published : 09 Nov 2018 08:32 AM
Last Updated : 09 Nov 2018 08:32 AM

டெங்கு, பன்றிக் காய்ச்சல் நாளுக்கு நாள் தீவிரமடைவதால் அச்சத்தில் பொதுமக்கள்; தமிழகத்தில் உயிரிழப்பு 30-ஐ தாண்டியது: அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4,500 பேருக்கு தீவிர சிகிச்சை

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரு கிறது. இக்காய்ச்சல்களால் இந்த ஆண்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவ மனைகளில் 4,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருவநிலை மாற்றம், கொசு உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத் தில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2,800 பேரும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,700 பேரும் அரசு, தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல்கள் காரணமாக பலி எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, பன்றிக் காய்ச்சலுக்கு 15 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 10 பேரும் பலியானதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை நேற்று 30-ஐ தாண்டியுள்ளது.

சென்னை, புறநகர் மாவட்டம்

தலைநகரான சென்னையை பொறுத் தவரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. மருத்துவ மனைகளில் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்புக்கு இரட்டைக் குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் யாரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல் இல்லை. பன்றிக் காய்ச்சலுக்கு காஞ்சி புரம் சேகர், திருநின்றவூர் நாதுராம், ஆவடி சிறப்பு காவல்படை காவலர் விஜய் ஆகியோர் கடந்த மாதக் கடைசியில் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த 2 மாதங்களில் வைரஸ் காய்ச்சலால் 3 பேர் இறந்தனர். திருவள்ளூரில் கடந்த 2 மாதங்களில் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்தனர். பன்றிக் காய்ச்சலுக்கு 4 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

மதுரை, நெல்லை, குமரி

மதுரை அரசு மருத்துவமனையில், திருமணமாகி 7 மாதங்களே ஆன திண்டுக்கல் ஜீவிதா (19) பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று உயிரிழந்தார். இங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தீபாவளி விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறைக்கு வந் திருந்த திருப்பூர் யுவராஜ் (12), ஒரு வயது குழந்தை ராம் ஆகியோர் நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி மாவட்டங்களில் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க் கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்கள்

திருச்சி மாவட்டத்தில் 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 பேர் என 4 பேர் பன்றிக் காய்ச்சலால் இதுவரை உயிரிழந்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் 559 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் டெங்கு அறிகுறியுடனும், 17 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி

ராசிபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமு கர் விஜய் (47) பன்றிக் காய்ச்சலால் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் டெங்கு காய்ச்சலால் இறந்தார். ஈரோடு புன்செய் புளியம்பட்டி லாரி ஓட்டுநர் ராமமூர்த்தி பன்றிக் காய்ச்சலாலும், சென்னிமலை பிரேம்குமார் டெங்கு காய்ச் சலாலும், திண்டல் புதுக்காலனி குமார சாமி மர்ம காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் இறந்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவந்த முத்துகுமார் (52) நேற்று உயிரிழந்தார். ராயர்பாளையம் சரவணன் (40) மூளைக் காய்ச்சலால் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஷகிலா (38), மாணிக்கவேல் (21) ஆகி யோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் அசோக்குமாரிடம் கேட்ட போது, ‘‘கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மர்ம காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதாக தெரிகிறது. வெளியூரில் தங்கி பணியாற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார்.

தருமபுரி மாவட்டம் பெத்தானூர் லாரி ஓட்டுநர் ராஜா (28), சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட நிலை யில் கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார்.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி

கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோபிநாத் (37), விழுப்புரம் சுகன்யா ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தனர். கடலூரில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளில் 340 பேர் பல்வேறு காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூரில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் 60-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழந்தார். 174 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். மற்ற அனைவரும் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி யில் கடந்த பிப்ரவரி, செப்டம்பரில் தலா ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

அச்சம் வேண்டாம்

காய்ச்சல்கள் பரவுவது, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல் வந்தால், குறிப்பாக குழந்தைகளுக்கு எந்தவித ஊசியும் போடக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளைஅவர்கள் உட்கொள்ளக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக் கடைகள் எந்த மருந்துகளையும் தரக்கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x