கம்யூ. எம்எல்ஏ பேச்சால் அரசு விழாவில் பரபரப்பு

கம்யூ. எம்எல்ஏ பேச்சால் அரசு விழாவில் பரபரப்பு
Updated on
2 min read

ஒகேனக்கல்லில் நடந்த ஆடிப் பெருக்கு விழாவில் தமிழக முதல்வரின் புகழ்பாடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து அடுக்கடுக் கான கோரிக்கை களையும் முன் வைத்தார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் ஆடி 18 விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்று வருகிறது. சனிக் கிழமை நடந்த தொடக்க விழாவில், அப்பகுதி சட்டமன்ற உறுப் பினர் என்ற முறையில் சிபிஐ-யைச் சேர்ந்த நஞ்சப்பன் அழைக்கப் பட்டிருந்தார். விழாவில் அவர் பேசியதாவது:

ஒகேனக்கல் தண்ணீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வீடுகள் வரை கொண்டு வந்து குடிநீராக வழங்கியதற் கும், நீதிமன்றம் மூலம் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்ததற்கும், காவிரி விவகாரம் தொடர்பான இடைக்கால தீர்ப்பை சட்டப் போராட்டம் மூலம் அரசிதழில் வெளியிடச் செய்ததற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.

அவர் கொடுத்த ஒகேனக்கல் நீர் மற்றும் இலவச அரிசி ஆகியவை தான் மாவட்ட மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இதையெல்லாம் செய்து முடித்த அதே முதல்வர் தருமபுரி மாவட்டத்துக்கு, குறிப்பாக ஒகேனக்கல் பகுதிக்கு செய்துதர வேண்டிய திட்டங்கள் பல அவரை நோக்கி காத்திருக்கின்றன. தருமபுரி தொடர்ந்து வறட்சியின் பிடியில் சிக்கி இருப்பதால் வாழ்வாதாரம் தேடி மாவட்ட மக்கள் பலர் குடும்பத்துடன் புலம்பெயர்ந்துவிட்டனர். வன விலங்குகள் பலவும் கூட இறந்து விட்டன. தாது வருட கோரப் பஞ்சத்துக்கு நிகரான சூழல் தற்போது தருமபுரி மாவட்ட கிராமங்களை வாட்டி வருகிறது. இதற்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளூர் வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக சிப்காட், சிட்கோ ஆகியவற்றை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

தருமபுரி-ஒகேனக்கல் சாலையை 4 வழிச் சாலையாக்கி னால் சுற்றுலா வாசிகள் சிரம மின்றி பயணிப்பர். ஒகேனக்கல் லில் காவிரிக் கோட்டம் ஒன்று அமைத்துத் தர வேண்டும். ஒகேனக்கல்-மைசூர்-பெங்களூர் சாலையை விரிவாக்கி மேம்படுத்த வேண்டும். மிருகங்கள், பறவை கள் அடங்கிய காட்சிச் சாலை ஒன்றை அமைக்க வேண்டும்.

நாகமரை அருகில் ஒட்டனூர் பகுதியில் காவிரியைக் கடக்கும் வகையில் 1 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் பாலம் அமைத்துக் கொடுத்தால் அப்பகுதி மக்களும் பயனடைவர், நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டு நெடுந்தூர பயணங்களை குறைக்கவும் வழி ஏற்படும். ஒகேனக்கல்-ஆலம்பாடி வரை ரோப்கார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

வெள்ளப்பெருக்கு நேரத்தில் வேலையிழக்கும் ஒகேனக்கல் பகுதி தொழிலாளர்களுக்கு அரசு குறிப்பிட்ட காலத் துக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் விழாவில் பங்கேற்ற சுற்றுலாத் துறை, உயர்கல்வித் துறை ஆகிய துறைகளின் இரு அமைச்சர்களும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு விழாவில் பங்கேற்ற அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in