Published : 30 Nov 2018 09:52 AM
Last Updated : 30 Nov 2018 09:52 AM

சபரிமலையில் தற்காலிக அஞ்சல் நிலையம் திறப்பு: கையாளப்படும் தபால்களில் 18 படிகள் முத்திரையிடப்படும்

சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு தற்காலிக தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது.

சபரிமலைக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நிரந்தர தபால் நிலையம் கிடையாது. ஆண்டுதோறும் மண்டல மகரவிளக்கு பூஜை காலத்தில் மட்டும் சபரிமலையில் உள்ள பம்பையில் சிறப்பு தபால் நிலையம் செயல்படும். 1985-ம் ஆண்டு முதல் இந்தத் தற்காலிக தபால் நிலையம் செயல்படுகிறது.

இந்தத் தபால் நிலையத் துக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், வேண்டு தல்களுக்காக தங்கள் வீடு களில் நடக்கும் சுபநிகழ்ச்சி களுக்கான அழைப்பிதழ் களை ஐயப்பன் பெயருக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த தபால் நிலையத்துக்கு அழைப்பிதழ்களை அனுப் பினால் அது ஐயப்பனுக்கே அனுப்பியதாக பக்தர்களி டையே நம்பிக்கை நிலவு கிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது பம்பையில் தற்காலிக சபரிமலை தபால் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. இது, ஜன.20-ம் தேதி வரை செயல்படும்.

இதுகுறித்து தேசிய விருதுபெற்ற முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் கூறியதாவது:

இந்தத் தபால் நிலையத்தில் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக ஸ்பீடு போஸ்ட்,பதிவு தபால், உட னடி மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படு கின்றன. இந்த தபால்நிலை யத்துக்கு தற்காலிக அஞ்சல் குறியீட்டுஎண்ணாக 689713 பயன்படுத்தப்படுகிறது. தபால்நிலைய அதிகாரியாக பிஜூ உள்ளார். அவருடன் 2 தபால்காரர்கள், 3 பன் முகப் பணியாளர்கள் பணிபுரி கின்றனர். இந்த தபால்நிலை யத்தில் கையாளப்படும் கடித உறைகளின் மீது 18 படிகள் கொண்ட சிறப்பு முத்திரையிடு கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x