ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1.25 கோடி மோசடி கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1.25 கோடி மோசடி
கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை துரைபாக்கம் பாரதி யார் நகர் பிரதான சாலையை சேர்ந்த ராம்குமார்(66), இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒய்வு பெற்ற பணத்தில் வீடு வாங்க வேளச் சேரி பகுதியைச் சேர்ந்த சாம்பசி வன் (54) என்பவரை அணுகியிருக் கிறார். வேளச்சேரியில் அன்னை இந்திரா நகரில் வசிக்கும் மகேஸ் வரி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுரஅடி இடத்தை ராம்குமா ருக்கு வாங்கி தருவதாக போலி யான ஆவணங்களை காண்பித்து முன்பணமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை சாம்பசிவன் பெற்றிருக் கிறார்.

பின்னர் சாம்பசிவன் தனது 2-வது மனைவியின் தாயார் சுந்திரி என்பவரை மகேஸ்வரியாக நடிக்க வைத்து போலியான அடையாள அட்டைகளை காண்பித்து பல் வேறு தவணைகளில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை ராம்குமாரிடம் இருந்து வாங்கியிருக்கிறார். போலி ஆவணங்கள் தயாரிக்க சாம்பசிவத்தின் உறவினர் மனோ கர் (40), அவரது மனைவி பத்மா (37) ஆகியோர் உதவியுள்ளனர்.

பணம் கொடுத்து நீண்ட நாட் கள் கடந்த பின்பும் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்கா மல் நாட்களை கடத்தியிருக்கிறார் சாம்பசிவன். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராம்குமார், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, சாம்பசிவன், மனோகர், பத்மா ஆகிய 3 பேரை யும் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in