Published : 01 Nov 2018 10:24 AM
Last Updated : 01 Nov 2018 10:24 AM

நவீன இந்தியாவின் சிற்பி வல்லபபாய் படேல்: சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் புகழாரம்

இரும்பு மனிதரான சர்தார் வல்லப பாய் படேல், நவீன இந்தியாவின் சிற்பி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புக ழாராம் சூட்டினார்.

சர்தார் வல்லபபாய் படேல் நினைவுஅறக்கட்டளை மற்றும் சென்னை கேந்திரா பாரதிய வித்யா பவன் சார்பில் படேலின் 143-வது பிறந்த நாள் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று கொண் டாடப்பட்டது. ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இதில் பங்கேற்று படேல் பிறந்த நாளையொட்டி பல்வேறு மொழிகளில் நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் முதுபெரும் தலை வராகத் திகழ்ந்த படேல், இந்திய அரசிலயமைப்பு சட்டத்தை வடி வமைத்ததில் பெரும் பங்காற்றி னார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான வரைவுக் குழு தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டதற்கு படேல் முக்கிய காரணமாக இருந்தார். மகாத்மா காந்தி இந்தியாவின் தந்தை என்றால், இரும்பு மனித ரான சர்தார் வல்லபபாய் படேல் நவீன இந்தியாவின் சிற்பி ஆவார்.

அர்ப்பணிப்பு உணர்வு

அவரது நினைவு மற்றும் பெருமையைப் போற்றும் வகை யில் குஜராத்தில் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்துள் ளார். இதுதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். அந்த சிலைக்கு ஒற்றுமை சிலை என்று பெயரிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. படேலின் வழியில் இளைஞர்கள் தன்னல மின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டுக்கு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

படேலுக்கு பெரும் பங்கு

தலைமை உரையாற்றிய பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் என்.ரவி, “இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் பார திய வித்யா பவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரது ஆலோச னையின் பேரில்தான் பாரதிய வித்யா பவன் தொடங்கப்பட்டது. அந்த வகையில் படேலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் பாரதிய வித்யா பவன் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஒன்று பட்ட இந்தியாவை உருவாக் கியதிலும் படேலுக்கு பெரும் பங்கு உண்டு” என்றார்.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கேவிஎஸ். கோபாலகிருஷ்ணன் பாராட்டுரை வழங்கினார். முன்ன தாக, எஸ்.வி.பி.எம். அறக்கட் டளை தலைவர் என்.ஆர்.தவே வரவேற்றார். நிறைவில், அறக்கட்டளை கவுரவ செயலாளர் கே.ஜே.சூரியநாராயணன் நன்றி கூறினார். பாஜக மூத்த தலைவர் களில் ஒருவரான இல.கணேசன் எம்பி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x