புயல் தாக்குதலில் சிக்கி இருளில் மூழுகிய கிராமங்களில் மின் வாரிய தொழிலாளர்கள் தீவிர பணி: மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பில் மும்முரம்

புயல் தாக்குதலில் சிக்கி இருளில் மூழுகிய கிராமங்களில் மின் வாரிய தொழிலாளர்கள் தீவிர பணி: மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பில் மும்முரம்
Updated on
2 min read

கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த 5 நாட் களாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் செய்வதற்கு தேவையான பணி களில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

புயல் தாக்குதலில் சிக்கிய டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. கடந்த 5 நாட்களாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான மின் கம்பங் கள், ஏராளமான மின்மாற்றிகள் சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. மழையை யும் பாராமல் இவற்றை சீரமைக் கும் பணியில் மின்வாரிய தொழிலா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மின்வாரிய தொழிலாளர்கள் மின்கம்பிகளை இழுத்துக் கட்டுவது, சாய்ந்த மின் கம்பங்களை சீரமைப்பது, முறிந்த கம்பங்களுக்குப் பதிலாக புதிய கம்பங்களை நடுவது உள்ளிட்ட பணிகளில் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் சந்திரசேகரன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங் கள் அடியோடு சாய்ந்து விழுந்து விட்டன. பல மின்கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளன. நூற்றுக்கணக்கான மின்மாற்றி கள் கீழே விழுந்து பழுதடைந்துள் ளன.

இவற்றை சீரமைக்கும் பணி யில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மின் வாரிய பணியாளர்கள் 800 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர் களுடன் கோவை, திருவண்ணா மலை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந் தும் வரவழைக்கப்பட்டுள்ள 2,000 மின்வாரிய தொழிலாளர்கள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர், நன்னிலம், குட வாசல் உள்ளிட்ட மாவட்டத் தின் பெரும்பாலான பகுதி களுக்கு மின் விநியோகம் கொடுக்கப்பட்டுவிட்டது.

மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதி களில் சீரமைப்புப் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. மன் னார்குடி மற்றும் திருத் துறைப்பூண்டியில் ஒரு பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் முத்துப்பேட்டை மற்றும் மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் மின் பாதையை சரி செய்து சீரான மின் விநியோகம் விரைவாக செய்ய வேண்டும் என மின்துறை அமைச் சர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதிகாரிகள் சில தினங்களுக்குள் கிராமப்புறங்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள னர். எனவே, தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இதற்காக மின்வாரிய தலைமை பொறியாளர் தலைமை யில் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகளும் திருவாரூர், நாகை மாவட்டங்களில் முகாமிட்டு பணி களை முடுக்கி விட்டுள்ளனர் என்றார்.

நாகை மாவட்டத்தில்

இதேபோன்று நாகை மாவட்டத் தில் சேதமடைந்துள்ள ஆயிரக் கணக்கான மின்கம்பங்கள், நூற்றுக் கும் மேற்பட்ட மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி 5 நாட்களாக நடந்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு உட்பட பல்வேறு பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் 137 முகாம் களில் 44,087 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்த முகாம்களுக்கு இரவு நேரங்களில் ஜெனரேட்டர்கள் மூலமாக மின் இணைப்பு வழங்கப் பட்டு வருகிறது.

இதனால் டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப் பதால், வெளியூர்களில் இருந்து டீசல் தருவிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக வருவாய்த் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

வீடுகளில் தங்கி இருக்கும் பொதுமக்கள் மெழுகுவத்தியைக் கொண்டு சமாளித்து வருகிறார்கள். ஆனால், மெழுகுவத்திக்கும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ 10-க்கு விற்ற ஒரு மெழுகுவத்தி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடை பெற்றுவரும் மின்கம்பங்கள் சீரமைப்புப் பணி குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி கூறியதாவது:

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 100 மின்மாற்றிகள் விழுந்துள்ளன. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில்தான் அதி களவில் டிரான்ஸ்பார்மர்கள் விழுந் துள்ளன. தற்போது 4,500 ஊழியர் கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆயிரம் ஊழியர்கள் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ள னர். கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் 10 நாட்களில் முழுமையாக மின் விநியோகம் செய்யும் வகையில் சீரமைப்புப் பணிகள் துரித கதி யில் நடைபெற்று வருகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in