ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: திமுக கூட்டணியை உடைக்க சதி என குற்றச்சாட்டு

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: திமுக கூட்டணியை உடைக்க சதி என குற்றச்சாட்டு
Updated on
2 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.

கடந்த 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. அதன்பிறகு இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கி ணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘‘திமுக கூட்டணியில், காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளே உள்ளன. மதிமுக, விசிக போன்ற கட்சிகள் கூட்டணியில் இல்லை. அவை நட்புக் கட்சிகளாகவே உள்ளன. மக்களவைத் தேர்தலுக் கான கூட்டணி இன்னும் உருவாக வில்லை’’ என கூறியிருந்தார்.

இது மதிமுக, விசிக கட்சியினர் இடையே மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத் தியது. துரைமுருகனின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘‘திமுக கூட்டணியில் மதிமுக, விசிக இல்லை என துரைமுருகன் கூறியது மதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’’ என கூறியிருந்தார். இதற்கு ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை.

இந்தச் சூழலில் ஸ்டாலினை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று பகல் 12 மணி அளவில் திருமா வளவன் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி கள் ஓரணியில் திரள வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலை திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையுடன் சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அகில இந்திய அளவில் மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே எங்கள் நிலைப் பாடு. இதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 10-ம் தேதி 'தேசம் காப்போம்' என்ற பெயரில் திருச்சியில் மாநாடு நடக்கிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்கள் திருச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். இது குறித்து ஸ்டாலினிடம் பேசினோம்.

திமுக - விசிக இடையேயான உறவு மிகவும் வலிமையாக உள் ளது. இதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. விசிகவுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்க முன்வந்ததால் பிரச்சினை என சிலர் வதந்தி பரப்புகின்றனர். திட்டமிட்டு சதி செய்கிறார்கள். திமுக கூட்டணி யில் இருந்து ஏதாவது ஒரு கட் சியை வெளியேற்றிவிட வேண்டும் என திட்டமிட்டு சிலர் செயல் படுகின்றனர். அவர்களால் திமுக கூட்டணியை உடைக்க முடியாது. ஸ்டாலினை சந்தித்தபோது திமுக பொருளாளர் துரைமுருகனும் உடன் இருந்தார். அவருடன் மகிழ்ச்சியுடன் பேசினோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக நேற்று காலை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் களிடம் பேசிய திருமாவளவன், ‘‘கூட்டணி குறித்து துரைமுருகன் கூறியது எதார்த்தமானது. திமுக வுடன் தோழமையுடன் இருக்கி றோம். கூட்டணி அறிவிப்பை திமுக தலைமை வெளியிட வேண்டும் என நான் கடந்த சில மாதங்களாகவே கூறிவருகிறேன். அதை துரை முருகன் வழி மொழிந்துள்ளார். திமுக கூட்டணியில் எந்த சலசலப் பும் இல்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in