Published : 26 Nov 2018 09:33 AM
Last Updated : 26 Nov 2018 09:33 AM

இந்து தமிழ் நாளிதழின் பெண் இன்று இணைப்பிதழ் சார்பில் திண்டுக்கல்லில் மகளிர் திருவிழா: திட்டமிடல் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம்; காந்தி கிராம பல்கலை. பேராசிரியர் ஜாகிதா பேகம் அறிவுரை 

திண்டுக்கல்

திட்டமிடல், விடாமுயற்சி, துணிவு, மனம் தளராமை ஆகியவை இருந்தால் பெண்கள் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாகிதா பேகம் பேசினார்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம்.வி.முத் தையா அரசு மகளிர் கல்லூரி அரங்கில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மகளிர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கே.நாகநந்தினி பேசியதாவது:

பெண்களின் திறமையை வெளிக்கொணர பெண்களாகிய நாமே முடிவெடுக்க வேண்டும். ‘இந்து தமிழ்’ நடத்தும் மகளிர் திரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நீங்கள் ஆர்வமுடன் வந்துள்ளது நீங்களே எடுத்த முடிவு என்பதால் இது உங்களுக்கே உரிய மகிழ்ச்சி யையும், பெருமையையும் வெளிக் கொணரும் என்றார்.

வெற்றி தேடிவரும்

மகளிர் நலம் குறித்து பேராசிரியர் ஜாகிதா பேகம் பேசியதாவது:

ஆவதும் பெண்ணாலே, அழி வதும் பெண்ணாலே என்றால், தீமை களை அழிப்பது பெண்ணாலே என்று அர்த்தம். பெண் புத்தி பின் புத்தி என்பது ‘பின்’ போன்ற கூர்மையான புத்தியுள்ளவர் பெண் என்று அர்த்தம்.

பெண்கள் முன்னேற்றத்துக்குக் காரணம் கல்விதான். கல்வியில் சிறந்தால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும். கட்டுப்பாடு களைக் கற்றுக்கொண்டால் சிற கடித்துப் பறக்கலாம். நமது கலாச்சாரம், பண்புகளை அன்பாக வளர்க்கும்போது, எல்லாப் பெண் களும் அவரவர் சார்ந்த துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

இதற்கு திட்டமிடல் தேவை. விடா முயற்சி வேண்டும். சில தோல்வி களைக் கொண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சி, துணிவு வேண்டும், மனம் தளராமை வேண்டும். பெண் கள் இல்லை என்றால் எந்த ஒரு துறையும் பரிணமிக்க முடியாது, வளர்ச்சி அடைய முடியாது.

பெண்களின் முன்னேற்றம் அவர் களின் இல்லத்தில் இருந்து ஆரம்பிக் கிறது என்று சொல்வதை விட அவர்களது உள்ளத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பெண்களாகிய நீங்கள் உங்களுடைய திறமை என்ன என்பதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால் வெற்றி உங்களுக்குத்தான். இதன் மூலம் வெற்றியைத் தேடி நாம் அலைவதைவிட வெற்றி நம்மைத் தேடிவரும் நிலை ஏற்படும் என்றார்.

நேரம் ஒதுக்க வேண்டும்

பெண்கள் மன நலம் குறித்து டாக் டர் ஷர்மிளா பாலகுரு பேசியது:

ஆண்களைவிட இரு மடங்கு மன நோய் பெண்களை தாக்கும் நிலை உள்ளது. இதைத் தவிர்க்க முதலில் ஆறு மணி நேரம், அதிகபட் சமாக 8 மணி நேரம் தூங்குவது அவ சியம். மன நலம் காக்க தூக்கம் மிக முக்கியமான ஒன்று. அடுத்ததாக நமக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். சமைப்பது, மெகா சீரியல் பார்ப்பது என்பது உங்களுக் கான நேரம் கிடையாது. உங்களுக் கான நேரம் என்பது நண்பர்களுடன் சிரித்துப் பேசுவது. பாடல் கேட்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை உங்களுக்கு மன நிம்மதியைத் தரும்.

ஒரு பிரச்சினையை மனதில் நிறுத்திக்கொண்டே இருப்பது, தேவையின்றி கடந்த கால நிகழ்வு களை நினைவுபடுத்துவது ஆகி யவை மன அழுத்தத்தைத் தரும். நிகழ் காலத்தை சந்தோஷ மாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நேர மேலாண்மையை சரியாக வைத்துக்கொண்டால் பல பிரச் சினைகள் குறையும். எண்ணங் களை சரிசெய்தால் போதும். எதிர் மறை சொற்கள், நேர்மறை சொற்கள் நமது மனதில் தாக்கத்தை ஏற்படுத் தும். உன்னால் முடியும் என்ற நம் பிக்கையான வார்த்தைகளை மன துக்குள் நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மால் முடியாத காரி யத்தை நமது மனது நினைத்தால் முடிக்க முடியும் என்றார்.

இதைத் தொடர்ந்து சின்னத் திரை பெண்களை சீரழிக்கிறதா?, சீர்படுத்துகிறதா? என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல் வர் ரேவதி சுப்புலட்சுமி நடுவராக இருந்தார்.

‘சீரழிக்கிறது’ என்ற தலைப்பில் மதுரை ஆசிரியர் அசிலா, ‘சீர்படுத்து கிறது’ என்ற தலைப்பில் திண்டுக் கல் ஆசிரியர் நாகபுஷ்பம் ஆகி யோர் பேசினர். முடிவில் சின்னத் திரை பெண்களை சீரழிக்கி றது. அது சின்னத்திரை அல்ல, சின்ன சிறை என்று நடுவர் ரேவதி சுப்புலட்சுமி தீர்ப்பளித் தார். எரிபொருள் பாதுகாப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் தியாகராஜன் பேசினார்.

தொடர்ந்து சக்தி கலைக் குழுவி னரின் பறையாட்டம் நடைபெற்றது. மதிய உணவுக்குப் பிறகு உடனடி போட்டி, திடீர் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா வில் பங்கேற்ற அனைவரும் பரிசு களுடன் சென்றனர்.

நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி யில் `இந்து தமிழ்' நாளிதழ், `காமதேனு' வார இதழின் திண்டுக் கல் முகவர்கள் ரமேஷ்குமார், செந்தில்குமார், விளம்பர முகவர் லாரன்ஸ் ஆகியோர் கவுரவிக்கப் பட்டனர்.

இணைந்து வழங்கியோர்

மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் திண்டுக்கல் எம்.வி.முத்தையா மகளிர் கல்லூரி, சேப்டி பார்ட்னராக இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

வாசகியருக்கு பொன்வண்டு சோப், சௌபாக்யா வெட்கிரைண் டர், பொன்மணி வெட்கிரைண்டர், மீனாஸ் அப்பளம், எஸ்.வி.எஸ். மாவு, அன்னபிரியம் மசாலா, அரசி வாகை மரச்செக்கு எண்ணெய், ஒரி ஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட், ருத்ரா வையர்டெக் ஆகிய நிறு வனங்கள் ஏராளமான பரிசுகளை வழங்கின. சூப்பர் டிவி, பசுமை எப்.எம்., விவேராகிராண்டே, கரு ணாஸ் ரத்தினவிலாஸ் ஆகியோரும் இணைந்து வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x