

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப் பாக்கம் முதல் கோயம்பேடு வரை வைக்கப்பட்டுள்ள 437 கண் காணிப்பு கேமராக்களின் செயல் பாட்டை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னை முழுவதும் கண் காணிப்பு கேமராக்கள் வைப்பதற் கான பணிகளை காவல் துறையினர் செய்து வருகின்றனர். .
முதல்கட்டமாக சென்னை பெரு நகர காவல் எல்லைக்குட்பட்ட 31,802 கடைகள் மற்றும் 15,345 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்கு வரத்து காவல் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முத்துசாமி பாலம் (ஈகா திரையரங்கம்) சந்திப்பு முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான சுமார் 10 கிலோ மீட் டர் தூரத்தில் 437 கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் களை உடனடியாகக் கண்டுபிடித்து குற்றங்களைத் தடுக்க முடியும்.
சென்னையில் முக்கிய சாலை களில் 65% கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்ணாசாலை, ஆர்.கே. மடம் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.