அரசு விரைவு பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் புயல் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் கிடையாது: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

அரசு விரைவு பேருந்துகளில் கொண்டு செல்லப்படும்
புயல் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் கிடையாது: 
போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக் காக கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

‘‘கஜா’’ புயலால் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள னர். மின்சாரம், போக்கு வரத்து வசதிகள் பாதிக்கப்பட் டுள்ளன.

இதற்கிடையே, நிவாரணப் பொருட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் வசூலிக் கப்படாது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். இதுபற்றி கேட்டபோது, அவர்கள் மேலும் கூறியதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்காக கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது.

இதற்கான உத்தரவை போக்குவரத்துக் கழக கிளை அதிகாரிகளுக்கு அனுப்பியுள் ளோம்.

இவ்வாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in