

தஞ்சாவூர் வழியாக கார் மற்றும் ஸ்வராஜ் மஸ்தா வேனில் கஞ்சா கடத்திய 8 பேரை கியூபிராஞ்ச் போலீஸார் கைது செய்து போதை பொருள் கடத்தல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்றிரவு தஞ்சை மாவட்ட கியூ பிராஞ்ச் டி.எஸ்.பிக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் ஆய்வாளர் மற்றும் நாகப்பட்டினம் ஆய்வாளருடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது அவ்வழியாக வந்த இன்னோவா கார் மற்றும் ஸ்வராஜ் மஸ்தா வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது அந்த வாகனங்களில் 8 பெரிய மூட்டைகளில் 256 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. காரில் 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றினர்.
இதையடுத்து வாகனத்தில் வந்த 8 பேரை கைது செய்து இரண்டு வாகனங்கள், கைப்பற்றப்பட்ட 256 கிலோ கஞ்சா அனைத்தையும் போதைபொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரையும் 8C r/w 20( b)II(c), 29(1),25 NDPS Act ஆக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.