Published : 01 Nov 2018 10:25 AM
Last Updated : 01 Nov 2018 10:25 AM

‘தி இந்து’ குழுமம், என்எல்சி இணைந்து நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை: அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் வழங்கினார்

‘தி இந்து’ குழுமம் என்எல்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப் புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவி களுக்கு அஞ்சல்துறை உயர் அதிகாரி அலோக் ஓஜா பரிசு கோப்பைகளையும், பாராட் டுச் சான்றிதழ்களையும் வழங் கினார்.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், ஊழல் ஒழிப்பு விழிப் புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘தி இந்து’ குழுமம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி) இணைந்து ஓவியம், கேலிசித்திரம், பாடல் போட்டிகளை நடத்தியது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் ஆகிய மாவட்டங்களை உள் ளடக்கிய சென்னை பிராந்தியத்தில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் ஜூனியர், சீனியர் பிரிவுகளின்கீழ் ஏராளமான மாணவ - மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். ஓவியம், கேலி சித்திரப் போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.

இதில், சென்னை நகர அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா, என்எல்சி நிறுவன தலைமை பொதுமேலாளர் (மனித வளம்) என்.சங்கர், துணை பொது மேலாளர் (விஜிலென்ஸ்) எஸ். சந்திரன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

‘தி இந்து’ சர்குலேஷன் பிரிவு பொதுமேலாளர் ஆர்.பாபு விஜய், போட்டியின் நடுவரும், உளவியல் நிபுணருமான சங்கீதா பிரகாஷ் ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வழங்கினர்.

அஞ்சல்துறை முதுநிலை கண் காணிப்பாளர் அலோக் ஓஜா பேசும்போது, “லஞ்சம் என்பது ஒருவித நோய். நமது மனதையும் இதயத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் இந்நோய் நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. எப்போது நேர்வழியில் இருந்து தவறி குறுக்கு வழியே நாட முயற்சிக்கிறோமோ அப் போது லஞ்சம் உருவாகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலமாக லஞ்சத்தை ஒழித்துவிட முடியாது. வேண்டுமானால் லஞ் சத்தை குறைக்க முடியும். மனதள வில் ஏற்படும் மாற்றம் மூலமாக மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். இதுகுறித்த சிந்தனையை பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவ - மாணவிகளின் மனதில் உருவாக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

என்எல்சி தலைமை பொது மேலாளர் சங்கர் பேசும்போது, “இளம்தலைமுறையினர் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அரசு சேவைகளை உபயோகப் படுத்தினால் லஞ்சத்தைத் தடுக்க முடியும்" என்றார்.

முன்னதாக, மாணவ - மாணவி கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ‘இந்து தமிழ்’ வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷங்கர் சுப்ரமணியம் வரவேற்று அறிமுகவுரை ஆற் றினார். நிறைவாக, ‘இந்து தமிழ் சர்குலேஷன் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x