கஜா: தொடரும் சீரமைப்புப் பணிகள்; நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா: தொடரும் சீரமைப்புப் பணிகள்; நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் 'கஜா' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'கஜா' புயலால் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயப் பாதிப்புகள், கால்நடைகள் உயிரிழப்பு, போக்குவரத்து துண்டிப்பு, உணவு - குடிநீர் பற்றாக்குறை, மின்வசதி துண்டிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in