Published : 10 Nov 2018 08:25 PM
Last Updated : 10 Nov 2018 08:25 PM

உடற்பயிற்சிக்கு ‘ஜிம்’; தியானத்துக்கு குடில்: ஆரோக்கியம் பேண உதவும் சுற்றுச்சூழல் பூங்கா

மதுரை மாநகராட்சி வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் உடல், மன நலத்தைப் பாது காத்துப் பராமரிக்க உதவும் வகையில் உடற்பயிற்சி சாதனங் களுடன் கூடிய ஜிம்மும், தியானம் செய்வதற்கான குடிலும் அமைந்துள்ளது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் 20 ஏக்கரில் அமைந்துள்ள சுற்றுச் சூழல் (எக்கோ பார்க்) பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பொழுது போக்கவும், நடைப் பயிற்சிக்காகவும் வருகின்றனர்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மக்கள் இந்த பூங்காவில் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொழுதுப்போக்கிற்காக கட்டணம் வசூலித்துக்கொண்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் நடை பயிற்சிக்கான சிறந்த இடமாக உள்ளதால் அமைச்சர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்த சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு உபகர ணங்கள், புல்வெளி தரைகளை மட்டும் கொண்டிருக்காமல் இந்தப் பூங்கா சற்றே மாறுபட்டுள்ளது.

வாகனங்களின் உதிரிப்பாகங் களில் தத்ரூபமாக வடிவமைக் கப்பட்ட பாரம்பரியச் சிற் பங்கள், பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை வர வேற் கிறது. குறிப்பாக ஜல்லிக் கட்டு காளையை அடக்கும் வீரர், குழந்தைகளைக் கவரும் பறவைகள், விலங்குகள் கலைந யத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. இதுதவிர, பிரம்மாண்டப் படகு குழாம், இசைக்கேற்ப நடனமாடும் நீரூற் றுகளும் உள்ளன. கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கின்றன. அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பழமையான இரும்புத் தூண் களால் சுற்றுச்சுவர் கட்டுதல், புல் தரை அமைத்தல், பூச்செடிகள் வைத்தல், நடைபாதை அமைத்தல், இருக்கைகள் அமைத்தல், மின்வி ளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் உடற்பயிற்சி சாத னங்களுடன் கூடிய ஜிம், தியா னம் செய்வதற்கு குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் புல்வெளிக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி சாதனங்களை நடைப்பயிற்சி, பொழுதுப்போக்க வருவோர் ஆர்வமுடன் பயன்படுத் துகின்றனர்.

இன்றைய அவசர உலகில், நடைப்பயிற்சிக்கும், உடற்பயிற் சிக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டதால் இளைய தலைமுறையினர் ஜிம்மிற்கு சென்று, பல ஆயிரம் செலவு செய்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றனர். ஆனால், ஜிம்மில் இருக்கும் அத்தனை உடற்பயிற்சி சாதனங்களையும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து, மாநகராட்சி இந்தப் பூங்காவில் அமைத்துள்ளது.

இந்த சாதனங்களை பூங்கா விற்கு வரும் மக்கள் பயன் படுத்த தொடங்கியுள்ளனர். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி முடிப்போர் பலர் பூங்காவில் உள்ள குடிலுக்குச் சென்று தியானமும் மேற்கொள்கின்றனர். இதுதவிர, காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரையும், அதன்பிறகு 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் இந்த தியானக்குடிலில் யோகா பயிற்சிகள் நடக்கின்றன.

பசுமையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உணர்த்தும் இந்தப் பூங்கா, தற்போது பொதுமக்களுடைய உடல் ஆரோக்கியத்தை காக்கத் தொடங்கி உள்ளதால், பூங்காவிற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x