

மின்தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், துணைமின் நிலை யங்களில் சூரியஒளி மின்நிலை யங்களை அமைத்து சூரிய மின் சாரத்தைத் தயாரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் தற் போது அனல், நீர் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதைத் தவிர, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. எனினும், மின்தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்நிலையில், சூரியஔி மின்சாரத்தை அதிகளவு உற்பத்தி செய்யுமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி வரு கிறது. இதையடுத்து, தமிழ்நாடு மின்வாரியம் சூரியஒளி மின் சாரத்தை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன்படி, மின்வாரியத்தின் துணை மின் நிலையங்களில் உள்ள காலி இடங்களில் சூரியஒளி மின்நிலையங்களை அமைத்து மின்சாரம் தயாரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் 40 கிலோவாட் திறனிலும், அதே போல், அச்சிறுப்பாக்கம், வீராபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் உள்ள காலி இடங்களில் 20 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், ஆலந்தூர், சிறுசேரி ஆகிய துணைமின் நிலையங்க ளிலும் சூரிய சக்தி மின்நிலையங் கள் அமைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவற்றுக்கு ரூ.90 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி தொடங்கும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.துணைமின் நிலையங்களில் உள்ள காலி இடங்களில் 20 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.