

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதி கரித்துள்ளதால், காவிரி கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்ப வர்கள் பாதுகாப்பான இடங்க ளுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, பத்ரா உள்ளிட்ட அணை கள் நிரம்பி உள்ளன. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அணைகளிலிருந்து புதன்கிழமை விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நேற்று முதல் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. தமிழக எல்லையான பிலுகுண்டுலுவில் நேற்று காலை 11 மணி நிலவரப்படி 25 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. ஒகேனக் கல்லுக்கு இன்று மதியத்திற்குள் ஒரு லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் நாகமரை, நெருப்பூர், காவிரி முதலைப் பண்ணை ஆகிய ஊர்க ளில் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலை யில் உள்ளது.
நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் தலை மையில் அதிகாரிகள் ஒகேனக் கல்லில் ஐந்தருவி, தொங்கும் பாலம் உள்ளிட்டப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வரு வாய்த்துறையினர் கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.