Published : 24 Nov 2018 09:13 AM
Last Updated : 24 Nov 2018 09:13 AM

புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிக கூரை அமைக்க இலவச தார்ப்பாய்: உடனடியாக வழங்க ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை

புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிக கூரை அமைக்க தார்ப்பாய் ஷீட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இவற்றை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வாங்கி உடனடியாக வழங்க ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 16-ம் தேதி அதிகாலை அதிதீவிர ‘கஜா’ புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடந் தது. இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுத் ததன் காரணமாக, பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், புயலின் கடுமையான தாக்கத்தால் வீடுகள், பயிர்கள், மரங்கள், மின் கம்பங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மிக அதிக அளவில் சேதம் அடைந்தன.

புயலால் பாதிக்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பால், வேட்டி, சேலை, பாய், போர்வை போன்ற அடிப் படை வசதிகளும் சுகாதாரம், மருத்துவ வசதிகளும் அளிக் கப்பட்டு வருகின்றன.

புயல், கனமழையின் தாக்கத் தால் முழுவதும் சேதமடைந்த வீடு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுககு ரூ.4,100 வழங்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

முழுவதும் சேதமடைந்த குடிசைகள், வீடுகளுக்கு பதிலாக தகுதி வாய்ந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதி வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரை கள் சேதம் அடைந்துள்ளன. தற் போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையில் இருந்து வீடுகளை பாதுகாக்க ஏதுவாக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்கள் அளித்தால் உதவியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, ஏழை மக்களின் நலனை கருத்தில்கொண்டு கூரை கள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற் காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்கள் வழங்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய்களை வாங்கி உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x