Published : 21 Nov 2018 09:24 AM
Last Updated : 21 Nov 2018 09:24 AM

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மருந்து, மாத்திரைகள் வாங்க கூடுதலாக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மருந்து, மாத்திரை கள் வாங்க கூடுதலாக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப் பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் சுகாதாரத் துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2,214 மருத்துவ முகாம்கள்

பாதிக்கப்பட்ட 6 மாவட்டங் களில் 2,214 மருத்துவ முகாம் களின் மூலம் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 271 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் இடங்களில் கூடுதல் மருத்துவ முகாம்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வாங்குவதற்காக கூடுதலாக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையில் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x