ஏரி உபரி நீர் குடியிருப்புகளுக்குள் செல்வதைத் தடுக்க ஆதனூரில் ரூ.8 கோடியில் மூடுகால்வாய் பணி தொடக்கம்

ஏரி உபரி நீர் குடியிருப்புகளுக்குள் செல்வதைத் தடுக்க ஆதனூரில் ரூ.8 கோடியில் மூடுகால்வாய் பணி தொடக்கம்
Updated on
1 min read

ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்புகளுக்கு செல் வதைத் தடுக்க ரூ.8 கோடியில் பாதாள மூடு கால்வாய் அமைக் கும் பணி ஆதனூரில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பெய்த கன மழை யின்போது சென்னை புறநகர் பகுதி கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. கால்வாய்களின் மீது இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடந்தன. பல இடங்களில் பட்டா நிலம், சாலைகள் இருப்பதால் ஏரிகளை இணைப்பதில் சிக்கல் இருந்தது. இதனையடுத்து இப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண ரூ.1,950 கோடியில் பாதாள மூடு கால்வாய் திட்டத்தைப் பொதுப்பணித் துறை தயாரித்தது.

இந்த திட்டத்தின்படி சாலையின் கீழ் பகுதியில் கால்வாய் அமைக் கப்பட்டு, ஒவ்வொரு ஏரிக்கும் இணைப்பு கொடுக்கப்படும். இத னால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் குடியிருப்புகளுக்குள் செல்வது தடுக்கப்படும். முதல் கட்டமாக ரூ.84 கோடியில் இந்தப் பணிகளைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கூடுவாஞ்சேரி அருகே ஆதனூரில் ரூ.8 கோடியில் இந்த பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: ஏரியில் இருந்து வெளியே றும் நீர் மற்ற ஏரிகளுக்கு செல் லும் வகையில் பாதாள மூடு கால்வாய் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல் கட்ட மாக மழைக் காலங்களில் அதிகப் பாதிப்பு ஏற்படும் பகுதி களைக் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. அதன்படி ரூ.8 கோடியில் ஆதனூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் நேரிடையாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் கால்வாய் 720 மீட்டர் நீளமும், 4 அடி அகலமும், 2.5 அடி ஆழமும் கொண்டதாக இருக்கும். 3 மாதங்களில் பணிகளை முடிக் கும் வகையில் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in