

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதலாக 508 காலியிடங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான இறுதி தேர்வு பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.
4 நாட்கள் கடந்துவிட்டதால் தேர்வுப் பட்டியலை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலியிடங்கள் சேர்க்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை அறிவித் துள்ளார்.