Published : 15 Nov 2018 08:36 AM
Last Updated : 15 Nov 2018 08:36 AM

தருமபுரி மாணவி உயிரிழந்த சம்பவம்: உண்மை நிலை அறிய சென்ற 4 பேர் சிறையில் அடைப்பு

தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலைக் கிராமத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறியச் சென்ற சமூக ஆர்வலர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங் குடியின பிளஸ் 2 மாணவி கடந்த 5-ம் தேதி 2 இளைஞர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 10-ம் தேதி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய பெண் கள் கூட்டமைப்பினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 16 பேர் அடங் கிய குழுவினர் கடந்த 13-ம் தேதி சிட்லிங் கிராமத்துக்கு சென்றனர்.

அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீஸார், எழுத்தாளர் சுகிர்தராணி உள் ளிட்ட 3 பேரை வழியிலேயே விசாரித்து, மாவட்டத்தில் இருந்து வெளியேறுமாறு காரில் அனுப்பி வைத்தனர். இதர 13 பேரிடமும் அரூர் காவல்நிலையத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை விசாரணை மேற்கொண்ட னர். பின்னர் சேலம் வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்ட 9 பேரை விடு வித்தனர். சமூக செயற்பாட்டாளர் கள் ராமகிருஷ்ணன் (51), வேடியப் பன் (50), வளர்மதி (25), மகாலட்சுமி (28) ஆகியோர் மீது சிட்லிங் கிராமத் தில் அனுமதியின்றி கூடியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்ப டுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக வழக்குப் பதிவு செய்து இரவு 11.30 மணியளவில் அரூர் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி பலியான வழக்கை முறையாக கையாளாத கோட்டப் பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் விசாரணை அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு, தருமபுரி ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் பேபி உமா, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாணவி பலாத் காரம் மற்றும் உயிரிழப்பு தொடர் பாக கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x