

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி, போலீஸ்காரரின் இரு சக்கர வாகனத்திலேயே தப்பிச் சென்ற ரவுடி பல்சர் பாபுவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு போலீஸா ரால் கைது செய்யப்பட்டவர் காசிமேட்டைச் சேர்ந்த பல்சர் பாபு. புழல் சிறையில் இருந்த பல்சர் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாபுவின் உடல் நலம் பாதிக் கப்பட்டதால் கடந்த அக்டோபர் 14-ம் தேதி மாலை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளி யாக அனுமதிக்கப்பட்டார்.
ஆயுதப்படை காவலர் கஜேந்தி ரன் பாதுகாப்புக்கு இருந்தார். மறுநாள் அதிகாலை 4 மணியள வில் பசிப்பதாகவும், டீ குடிக்க வேண்டும் போல் இருக்கிறது என வும் பாபு கூறியிருக்கிறார். இதனால் மனமிறங்கிய காவலர் கஜேந்திரன், பாபுவுக்கு கைவிலங்கு போடாமல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரேயுள்ள தேநீர் கடைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது கஜேந்திரனை பணி மாற்றிவிட வந்த மற்றொரு காவலரான சுந்தர், தனது பல்சர் பைக்கை சாவியுடன் தேநீர் கடையில் நிறுத்தினார். டீ குடித் துக் கொண்டிருந்த கைதி பல்சர் பாபு, சந்தர்ப்பத்தை சாதகமாக்கி, காவலர் சுந்தர் வந்த பல்சர் பைக்கையே எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
அவரைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெருங்களத்தூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பல்சர் பாபுவை தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் நேற்று முன்தினம் இரவு கைது செய்த னர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.