

சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ரூ.1,546 கோடி மதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் டெண்டர் கோரி இருந்தது.
அந்த டெண்டர் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்படுவ தாக இருந்தது. அதே நேரத்தில், துப்புரவு பணி தனியார் மயமாக்கப்பட்டால், மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் 1,800 நிரந்தர தொழிலாளர்கள், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப் பந்த தொழிலாளர்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், துப்புரவு பணியை தனியார்மயமாக்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அனைத்து தொழி லாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்புப் போராட்டம், முற் றுகைப் போராட்டம், தலைமைச் செயலகம் நோக்கி பேரணி என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில் மாநகராட்சி தொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்புரவு பணிகள் தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டர் திறப்பு தற்காலிகமாக தள்ளிவைக்கப் படுவதாக மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறை அறிவித் தது.
இந்நிலையில் துப்புரவு பணியை தனியார்மயமாக்கும் பணிகளை மாநகராட்சி மேற் கொண்டு வருவதாகக் கூறி, நவம்பர் 27-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என மாநகராட்சி தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச்செயலர் சீனிவாசலு கூறியதாவது: துப்புரவு பணியை தனியார்மயமாக்கும் டெண்டர் திறப்பை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக மாநகாரட்சி உறுதி அளித்த நிலையில், அப்பணிகளை மேற்பார்வை செய்வதற்கான 95 மேலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்க மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.
இந்நிலையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி றோம். அதன் தொடர்ச்சியாக 27-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். அன்று காலையில், அனைத்து மண்டலங்களிலும் உள்ள லாரி நிலையங்களில் இருந்து லாரிகள் வெளியில் செல்வதை தடுத்து நிறுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.