Last Updated : 28 Nov, 2018 08:39 AM

 

Published : 28 Nov 2018 08:39 AM
Last Updated : 28 Nov 2018 08:39 AM

புயல் பாதித்தாலும் பிரிய மனமின்றி நெடுவாசல் ஆலமரத்துக்குகே மீண்டும் வந்த வவ்வால்கள்: பழங்கள் இல்லாததால் பட்டினியில் வாடுவதாக மக்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றிச் சுழன்று லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்தும் முறித்தும் சென்ற கஜா புயல் காற்றால் நெடு வாசலில் உள்ள ஆலமரத்தில் இருந்து வேறு இடங்களுக்குப் பறந்துசென்ற வவ்வால்கள் மீண் டும் அதே மரத்தில் வந்து தங்கி உள்ளன.

நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கரில் சுற்றிலும் புதர்ச் செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் தங்கி இருந்தன. அந்த ஆலமரத்தின் அடியில் வெள்ளையப்பன் என் னும் அய்யனார் கோயில் உள்ளது.

பட்டாசு வெடிப்பதில்லை

இந்த மரத்தில் இருந்து ஒடிந்து விழும் ஒரு குச்சியைக்கூட யாரும் விறகுக்காக எனத் தொடு வதில்லை. இம்மரத்தில் உள்ள வவ்வால்களை வேட்டையாடு வதும் இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இதே இடத்துக்கு வந்துவிடுவது வழக்கம். அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தைக் கேட்டுதான் ஊரே எழும். இந்த வவ்வால்களின் நலன்கருதி சுற்று வட்டாரப் பகுதி களில் பட்டாசுகளை வெடிப்ப தையே பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்த்துவிட்டனர்.

இந்நிலையில், புயலின் தாக்கு தலால் இந்த ஆலமரத்தின் பெரும் பாலான கிளைகள் முறிந்து விட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்த மரத்தில் இருந்து எங்கெங்கோ சென்றுவிட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்துவிட்டன. இந்நிலையில், இயல்பு நிலை திரும்பியதையடுத்து பல்வேறு திசைகளில் பறந்துசென்ற வவ் வால்கள் மீண்டும் இந்த ஆல மரத்துக்கு திரும்பத் தொடங்கின. இதே மரத்தில் எஞ்சியுள்ள கிளை களிலும், குச்சிகளிலும் தங்கி உள்ளன.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி செல்ல முத்து கூறியபோது, “இம்மரத்தில் இருந்த பாதி வவ்வால்கள் புயல் காற்றால் இறந்து மரத்தடியிலேயே விழுந்துவிட்டன.

இங்கிருந்து வெளியேறி சில நாட்கள் வேறு எங்கோ வசித்த வவ்வால்களும் எங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் மீண்டும் இந்த மரத்துக்கே வந்திருப்பது பிரிந்துசென்ற சொந்தங்கள் எங்களை மீண்டும் பார்க்க வந் ததுபோல மகிழ்ச்சியை அளிக் கிறது.

அதேசயம், புயலால் இப் பகுதியில் இருந்த பழத்தோட் டங்கள் முழுமையாக அழிந்து விட்ட நிலையில், இந்த வவ் வால்கள் கடந்த ஒரு வாரமாக பட்டினியால் வாடுவதுதான் எங் களுக்கு வேதனையை அளிக் கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x