கஜா புயல்: மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்

கஜா புயல்: மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்
Updated on
1 min read

'கஜா' புயல் இன்று நாகப்பட்டினம் அருகே கரையைக் கடப்பதை ஒட்டி முக்கிய ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

'கஜா' புயல் இன்று இரவு 8 மணிமுதல் 11 மணி வரை நாகை அருகே கரையைக் கடக்கிறது. இதனால் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களில் கடும் காற்றும் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இம்மாவட்டங்களில் இன்று இயக்கப்படும் ரயில்கள் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

அவை குறித்த விவரம்:

1)  நவ.15 இன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 16851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும்.

2) நவ.15 இன்று தாம்பரத்தில் இருந்து புறப்படும்  வண்டி எண் 16191 தாம்பரம் - திருநெல்வேலி விரைவு ரயில் விழுப்புரம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும்.

3) நவ.15 இன்று மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 22624 மதுரை - சென்னை எழும்பூர்  விரைவு ரயில்  தஞ்சாவூர், விழுப்புரம்  வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக  திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

4) நவ.15 இன்று திருநெல்வேலியிலிருந்து இருந்து புறப்படும் வண்டி எண் 16192 திருநெல்வேலி -  தாம்பரம் விரைவு ரயில்  தஞ்சாவூர், விழுப்புரம்  வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக  திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in