Published : 10 Nov 2018 10:17 PM
Last Updated : 10 Nov 2018 10:17 PM

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை டி20 போட்டி: போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?- காவல்துறை பட்டியல்

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஞாயிறு மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

* பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை சந்திப்பிலிருந்து நோ என்ட்ரி ஆகவும். வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து என்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும். பின்பு கிரிக்கெட் முடிந்தவுடன் மேற்கண்ட போக்குவரத்து முறை எதிர்பதமாக மாற்றி செயல்படுத்தப்படும்.

* காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

* கெனால் ரோடு சாலை பாரதி சாலையிலிருந்து ஒரு வழிப் பாதையாகவும் வாலாஜா சாலையிலிருந்து நோ என்ட்ரி ஆகவும் செயல்படுத்தப்படும்.

* அண்ணா சாலையிலிருந்து வரும் எம்,பி, டி, டபிள்யூ (M,P,T,W) ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை. பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்குச் சென்றடையலாம்.

* B மற்றும் R ஆகிய எழுத்துகள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்குச் சென்றடையலாம்.

* போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் எம்,பி, டி, டபிள்யூ (M,P,T,W)ஆகிய எழுத்துகள் கொண்ட வாகனங்கள், எம்டிசி ஆகியவை பாரதி சாலை வழியாக கெனால் ரோடுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்குச் சென்றடையலாம்

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும் PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

* பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அண்ணா சாலையிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு. உழைப்பாளர் சிலை. காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புறச் சாலைக்குச் சென்று வாகனங்களை நிறுத்தலாம்,

* போர் நினைவுச் சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று PWD அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.

* காந்தி சிலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று PWD அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x