Published : 13 Nov 2018 01:40 PM
Last Updated : 13 Nov 2018 01:40 PM

ரூ. 4.86 கோடி மதிப்பில் பேரிடர் கால இயந்திரங்கள்: சென்னை மாநகராட்சிக்கு அமைச்சர் வழங்கினார்

சென்னையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

சென்னை மாநகராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.4 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டிலான மரஅறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் என கூடுதலாக 336 நவீன இயந்திரங்களை  எஸ்.பி.வேலுமணி இன்று 15 மண்டலங்களுக்கு வழங்கினார்.

 

சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை மாறுதலின் காரணமாக ஏற்படுகின்ற பேரிடர் நிகழ்வுகளால் சாலைகளில் விழுகின்ற மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட தற்போது 171 எண்ணிக்கையிலான மர அறுவை இயந்திரங்களும், பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழை வெள்ளநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு தற்போது அதிகதிறன் கொண்ட நீர் இறைக்கும் பம்புகள் 17 எண்ணிக்கையிலும் உள்ளன.

 

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் பொதுமக்களின் நலனுக்காக வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 5 ஹார்ஸ்பவர்  திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ரூ.59,000/ மதிப்பிலான மரஅறுவை இயந்திரங்கள்.

 

 கூடுதலாக 200 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,18,00,000/- மதிப்பீட்டிலும், 25 எச்.சி  திறன் கொண்ட ரூ.4,94,764/- மதிப்பிலான நீர் இறைக்கும் பம்புகள் கூடுதலாக 30 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,48,42,920/- மதிப்பீட்டிலும், மேலும் 8 மீட்டர் உயரத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிக்காக நவீன வகையிலான ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும் ரூ.19,98,000/ மதிப்பிலான இயந்திரங்கள்.

 6 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,19,88,000/- மதிப்பீட்டிலும், மழைக்காலங்களில் தெருவிளக்குகளை ஒளிரச் செய்வதற்காக 2 எச்.சி திறன் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் 100 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,00,00,000/- மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.4 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்கள் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

 

இவைகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் வழங்கினார்.

 

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியில் பெருமழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் கைபேசி மற்றும் அலுவலக எண்கள், அவசரகால தொடர்பு எண்கள், மேலும் தொடர்புடைய சேவைத்துறைகளான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை, கப்பற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், காவல்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம், உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் முகவரி அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 என்ற கையேட்டினை இன்று  வெளியிட்டார்கள்.

 

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x