அரசு அறிவித்த நிவாரண உதவி போதுமானதல்ல: நிதியை அதிகரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அரசு அறிவித்த நிவாரண உதவி போதுமானதல்ல: நிதியை அதிகரிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவியை அதிகரிக்க வேண்டும் என விஜயகாந்த், ராமதாஸ், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜய காந்த்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி யுள்ளது. இந்நிலையில் தற்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1000 கோடி நிவாரண உதவியை இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல், மக்களிடம் நேரடியாக காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். மேலும் தேவைப்படும் உதவியை அளிக்க முன்வர வேண்டும். மத்திய அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடன டியாக பார்வையிட வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மோசமாக நடைபெற்று வருகின்றன. புயலால் சேத மடைந்த குடிசைகள், படகுகள், மீன் வலைகள் உட்பட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி, நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக சென்ற டைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. மத்திய பேரழிவு நிதியில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மத்திய அமைச்சர்களோ, அதிகாரிகளோ இதுவரை பார்வை யிட வராமல், தமிழகத்தை புறக் கணிக்கும் வகையில் இருப்பது கண்டனத்துக்குரியது. பாதிக்கப் பட்டோரின் வாழ்வாதாரம் காக்க போதிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: மாநில அரசால் ஈடுகட்ட முடியாத அளவுக்கு புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டிய மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. ‘கஜா’ புயலை தேசியப் பேரிட ராக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்த முதல்வரின் அறிவிப்பு போதுமானதாக இல்லை. இந்த அறிவிப்பு மக்கள், விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நிவாரண உதவி குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை அறிந்து முடிவு செய்வது சிறந்தது. மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்ந்து நிவாரண உதவி களை தமிழக அரசு அறிவித் திருந்தாலும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக் களுக்கு விரைவாகவும், வெளிப் படையாகவும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேசிய பேரிடர் மேலாண்மை யின் வழிகாட்டுதலின்படி, எல்-3 பேரிடராக மத்திய அரசு அறிவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பாகுபாடின்றி இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.

சுத்தமான குடிநீர், உணவு மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைப் பதற்கு அரசு உறுதி செய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை துரிதமாக மீட்டெடுக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ‘கஜா’ புயல் தாக்குதல் நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் உணவின்றி, நீரின்றி தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அதிகாரிகள் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும். சோதனைகளைக் கடந்து டெல்டா மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுகூடி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதே போல் புயல் நிவாரண அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in