

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கொண்டு வாழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது 2-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி அளவில் அமமுக அவைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.அன்பழகன் தலைமையில் சென்னையில் மவுன ஊர்வலம் நடத்தப்படும். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.