Published : 15 Nov 2018 09:24 AM
Last Updated : 15 Nov 2018 09:24 AM

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு இலவசமாக அரசுப் பள்ளி மாணவர்கள் விமானத்தில் பயணம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஏற்பாடு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், இந்தி யன் ஆயில் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்தினர் இணைந்து, அரசு பள்ளி மாணவர்கள் 48 பேரை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்துச் சென்றனர்.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, இந்திய விமான ஆணையம், இந்தியன் ஆயில் மற்றும் இண்டிகோ விமான நிறுவனத்தினர், ‘கனவு பயணம்’ என்ற பெயரில், அரசு பள்ளி மாண வர்களை, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்றனர்.

48 மாணவர்கள்

இந்தப் பயணத்தில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அனகாபுத்தூர், மீனம்பாக்கம், கவுல்பஜார் மற்றும் பொழிச்சலுார் பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 48 பேர் சென்றனர்.

சென்னையில் இருந்து திருச்சி, மெரினா கடற்கரை, மாமல்ல புரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் விமானத்தில் அழைத்து செல்லப் பட்ட மாணவ - மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்றபோது மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் விமான நிலைய வளாகத்தில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்த விமான பயணத்தில் சிறப்பு விருந்தினராக, நகைச்சுவை நடிகர் சதீஷ் பங் கேற்று, மாணவர்களுடன் கலந்து ரையாடினார்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திரமவுலி கூறும்போது, “இந்த விமானப் பயணம், குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இது போன்ற பயணங்களின் மூலம், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளரும். குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். இன்று அதனை நேரில் கண்டோம்” என்றார்.

இந்த பயணத்தில், இண்டிகோ விமான நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அசீம் மித்ரா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விமான நிலையப் பிரிவு பொது மேலாளர் சவிதா நடராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கு விமானத் திலேயே உணவுகள் வழங்கப் பட்டன. சுமார் 1:30 நேரம் விமானத் தில் மாணவர்கள் பயணம் மேற் கொண்டனர்.

மாணவர்கள் மகிழ்ச்சி

“வானத்தில்தான் விமானத்தைப் பார்த்தோம். ஆனால் விமானத்தில் ஏறியது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. பயணம், மகிழ்ச்சி அளித்தது” என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, விமான ஓட்டி கள், பணிப்பெண்கள், அலு வலர்களுடன், விமானம் முன் நின்று, மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை ப்ரேம் செய்து மாணவர்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் பரிசாக வழங் கியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x