Published : 15 Nov 2018 10:25 am

Updated : 15 Nov 2018 10:25 am

 

Published : 15 Nov 2018 10:25 AM
Last Updated : 15 Nov 2018 10:25 AM

வேகமாக நகரும் கஜா புயல்; நாகை அருகே இன்று கரையை கடக்கிறது: இந்திய வானிலை மையம் தகவல்

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் இன்று காலை நேர நிலவரப்படி நாகைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், இன்று மாலை அல்லது இரவு நாகை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக்கடக்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.


imd1PNGஇந்திய வானிலை மைய படம்100ந்தநிலையில் புயல் நிலவரம் தொடர்பாக இந்தியா வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8.30 மணி நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

அதன்படி, கஜா புயல் தற்போது 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். சென்னைக்கு தென்கிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது.

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் அந்த பகுதியில் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புயல் கடந்து செல்லும் பாதையில் பலத்த காற்றுடன் மிக கனமழை இருக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கஜா புயல்நாகை அருகே கரையை கடக்கும்பலத்த மழைஇந்திய வானிலை ஆய்வு மையம்பலத்த காற்று

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author