Published : 24 Nov 2018 09:39 AM
Last Updated : 24 Nov 2018 09:39 AM

டெல்டா மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ராம்கோ சிமென்ட் நிறுவனம் நிவாரண உதவி: சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன

திருச்சி

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ராம்கோ சிமென்ட் நிறுவனம் மருத்துவ முகாம்கள் நடத்தியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியது.

அரியலூரில் உள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் மேல வீடு கிராமத்தில் நவ.21-ம் தேதி மருத்துவ முகாமை நடத்தினர். இந்த முகாமில் 300-க்கும் மேற்பட் டோருக்கும், நேற்று முன்தினம் காமராஜபுரம் மற்றும் ஊரணிபுரம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட் டோருக்கும் மருத்துவப் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன.

மேலும், புதுக்கோட்டை மாவட் டத்துக்கு 5 கிரேன்கள், 5 ஜேசிபி இயந்திரங்கள், 2 ஜெனரேட்டர்கள் ஆகியவை மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டன.

நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட காரப்பிடாகை, சித்ரா மணி, கீழப்பாண்டிகை மற்றும் அச்சக்கரை பகுதிகளுக்கு போர்வை, குடிநீர் பாட்டில்கள், நாப்கின், பிஸ்கட், கொசுவத்தி சுருள், தீப்பெட்டி, மெழுகுவத்தி, பிரட், பால் பவுடர் அடங்கிய பைகள் 2000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கொத்தமங்க லம், ஆலங்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளில் மக்களுக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் எடுத்துச் சென்று வழங்கப்பட்டது.

பேராவூரணி அருகிலுள்ள பால கிருஷ்ணபுரம், நாகை மாவட்டம் திருக்குவளை உள்ளிட்ட பகுதி களில் மக்களுக்கு பாய்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசி யப் பொருட்கள் விநியோகிக்கப் பட்டன.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத் தின் ஆர்ஆர். நகர் மற்றும் ஆலத்தியூர் பிரிவுகளிலிருந்து நிவாரணப் பொருட்கள் கந்தர்வக் கோட்டை மக்களுக்கும், நாகை மாவட்டம், காரப்பிடாகை, சிந்தா மணி, கீழப்பிடாகை கிராமங்களில் 2,300 போர்வைகள், 3,000 நாப்கின்கள், 2,300 பிஸ்கட் பாக்கெட்டுகள், 2000 பிரட் பாக் கெட்டுகள், 1,800 துண்டுகள், 1,000 பாய்கள், 1,500 மெழுகுவத்திகள், 2000 கொசுவத்தி சுருள்கள் உள் ளிட்ட பொருட்கள் விநியோகிக் கப்பட்டன. 500 தார்பாய்கள், 500 மூட்டைகள் அரிசி ஆகியவை தலைஞாயிறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.

கொத்தமங்கலம், பூங்காநகர் உள்ளிட்ட கிராமங்களில் புயலில் விழுந்த மரக்கிளைகளை, ராம்கோ நிறுவன ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.அரியலூர் மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் மரம் வெட்டும் 4 இயந்திரங் களுடன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x