

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செய லாளர் டேனியல் ரிச்சர்டு தலை மையிலான மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இவர் கள் புயல் பாதித்த பகுதி களில் 3 நாட்கள் ஆய்வு செய்து சேத விவரங்களை மதிப்படுகின்றனர்.
தமிழகத்தை கடந்த 16-ம் தேதி ‘கஜா’ புயல் தாக் கியது. நாகை மாவட்டம் வேதா ரண்யம் அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடந்த தால் நாகை, திருவாரூர், புதுக் கோட்டை, தஞ்சை, ராமநாத புரம் உள்ளிட்ட 12 மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட் டன. சூறாவளி காற்று, கன மழை காரணமாக வீடுகள், மரங்கள், மின் கம்பங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்தன.
புயல் கரையை கடக்கும் முன்னரே தமிழக அரசு பல் வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்தது. கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், புயல் தாக்குதலில் உயிரிழப்பு வெகுவாக குறைந்தது. இருப் பினும் இந்த புயலுக்கு 63 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பதிவாகி யுள்ளது.
கடும் புயலால் 3 லட்சத் துக்கும் அதிகமான வீடுகள், 88 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண் மற்றும் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிக மான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட் டன. பல மாவட்டங்களில் மின் விநியோகம், தொலைத் தொடர்பு முழுமையாக துண் டிக்கப்பட்டது. புயல் கரை யைக் கடந்த தினத்தில் இருந்து அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஆட்சி யர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை சீரடையவில்லை
வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப் பட்டு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனி னும் பல இடங்களில் இன்னும் நிலைமை சீரடையவில்லை. புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும் நாகை உள்ளிட்ட இடங்களில் இன்னும் மின் சாரம் வரவில்லை.
புயல், கனமழையால் உயி ரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அரசு சார்பில் நிவா ரணமாக அறிவிக்கப்பட்டது. மேலும், முகாம்களில் தங்கி யுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.8.800 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். சேத மடைந்த வீடுகள், பயிர்கள், படகுகளுக்கான நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கடந்த 20-ம் தேதி புயல் பாதித்த புதுக்கோட்டை மற்றும் பட்டுக்கோட்டை பகுதி களை பார்வையிட்டனர். அப் போது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவிகளை யும் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசி னார்.
பிரதமரிடம் மனு
அப்போது புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரம் மற்றும் தற்காலிக சீரமைப்புக்கு ரூ.16,341 கோடி நிதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத் தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார். முதல்வர் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பும் முன்னதாக, மத்திய உள்துறை இணை செயலா ளர் டேனியல் ரிச்சர்டு தலை மையில் மத்தியக் குழு அமைக் கப்பட்டது. இந்தக் குழுவினர் உடனடியாக தமிழகம் வந்து, புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களில் ஆய்வு நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, டேனியல் ரிச் சர்டு தலைமையிலான குழு வினர் நேற்றிரவு சென்னை வந்தனர். டேனியல் ரிச்சர்டு டன் மத்திய நிதித்துறை செலவினப் பிரிவு ஆலோ சகர் ஆர்.பி.கவுல், ஹைதரா பாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை பொறுப்பு இயக்குநர் பி.கே.வத்சவா, ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், எரிசக்தித் துறை தலைமைப் பொறி யாளர் வந்தனா சிங்கால் ஆகியோரும் சென்னை வந் தனர். இவர்களுடன், சென் னையில் உள்ள மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து துறை செயற் பொறியாளர் ஆர்.இளவரசன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
முதல்வருடன் சந்திப்பு
மத்தியக் குழுவினர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து மத்திய குழுவின ருக்கு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் விளக்குகிறார். இதையடுத்து, விமானத்தில் திருச்சி செல் லும் மத்திய குழுவினர், உடனடி யாக ஆய்வுப் பணியை தொடங்குகின்றனர். அவர்கள் 2 அல்லது 3 குழுக்களாக பிரிந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்குச் செல்வார் கள் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி வித்தன. எந்தெந்த பகுதி களுக்கு எப்போது செல்வார் கள், என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மத்தியக் குழு வினருடன் தமிழக வரு வாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த் துறை உயர் அலுவலர்களும் செல்ல உள்ளனர்.
26-ம் தேதி வரை 3 நாட்கள் ஆய்வு நடத்தும் மத்தியக் குழுவினர், மீண்டும் சென்னை வந்து முதல்வர், தலைமைச் செயலரை சந் தித்துவிட்டு, டெல்லி திரும்பு கின்றனர். தங்கள் ஆய்வின் அடிப்படையில் சேத விவரங் களை மதிப்பிட்டு அறிக்கை தயாரித்து விரைவில் மத்திய அரசிடம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.