Published : 17 Nov 2018 08:18 AM
Last Updated : 17 Nov 2018 08:18 AM

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ஊழியர்களின் அயராத பணி: பாராட்டுகளால் தமிழக அரசு உற்சாகம்

‘கஜா’ புயலால் மக்களுக்கு ஏற் படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் மேற்கொண்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை அடுத்து, பெரும்பாலான பொது மக்கள் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாராட்டுகளால் தமிழக அரசு உற்சாகம் அடைந் துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பரு வமழை வழக்கமாக அக். 20-ல் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு தாமதமாக நவ. 1-ம் தேதிதான் தொடங்கியது. முன்ன தாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பல பகு திகளில் மழை பெய்ததால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்கத் தொடங்கியி ருந்தது.

32 வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக கடலூருக்கு ககன்தீப்சிங் பேடி, நாகை மாவட்டத்துக்கு ஜவகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில், அடுத்தடுத்து 3-க்கும் மேற்பட்ட புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டன.

தமிழகத்தை நோக்கி முதலில் உருவாகி வந்த தித்லி புயல் ஒடிசாவை நோக்கிச் சென்றது. அப்போதிலிருந்தே, வருவாய் நிர்வாக ஆணையரகத்தின் மாநில தகவல் கட்டுப்பாட்டு மையம் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங் கியது.

தொடர்ந்து, மாவட்டங் கள், மாநகராட்சிகளில் பருவ மழைக்கான தகவல் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது மேலும் வலுப்பெற்று நவ.11-ம் தேதி ‘கஜா’ புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையும், மாவட்ட நிர்வாகங்களும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டன.

சென்னையில் உள்ள தகவல் கட்டுப்பாட்டு மையத்தில், 12 டெஸ்க் ஆபரேட்டர்கள், வருவாய், காவல், பொதுப்பணி, சுகாதாரம் என பலதுறை அலுவலர்கள் ஒரு ஷிப்ட்டுக்கு 50 பேர் வீதம் நியமிக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் அந்தந்த பகுதி அலுவலர்களுக்கு பரிமாறப்பட் டன. இவர்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினரும் இணைந்து நிலைமையை கண்காணித்தனர்.

நாகை மாவட்டத்தை நோக்கி புயல் நகரத் தொடங்கியதை அடுத்து நேற்று காலை மாநில தகவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த அமைச்சர் ஆர்.பி.உதய குமார், வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந் திர ரத்னூ உள்ளிட்டோருடன் அந்த மையத்திலேயே தங்கினார். வானிலை ஆய்வுமையம் தேசிய கடல்சார் மையம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்தார்.

அந்த தகவல்களின் அடிப் படையில் மாவட்டங்கள்தோறும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து திட்டங்களை தயாரித்து, மாவட்ட நிர்வாகங் களுக்கு அனுப்பி வைத்தனர்.

அமைச்சர்கள் சுறுசுறுப்பு

மாவட்டங்களில் அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து துறையினர் அடங்கிய குழுக்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண் டனர். குறிப்பாக நாகை மாவட் டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திருவாரூரில் ஆர்.காமராஜ், கடலூரில் எம்.சி.சம்பத், ராமநாதபுரத்தில் மணிகண்டன் என அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களை நேரடி யாக சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித் ததுடன், நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

புயல் நாகை மாவட்டத்தை நெருங்கிய நிலையில் சென்னை மாநில கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரு டன், அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் இணைந்து பணிகளை மேற் கொண்டார். நள்ளிரவில் புயலும் கரையை கடந்தது.

தொடர்ந்து புயல் பயணித்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தாலும், முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு, உயிரி ழப்புகளை பெருமளவுக்கு குறைத்துவிட்டது.

அரசின் இந்த நடவடிக்கைகளை திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலை வர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இது அர சுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

இந்நிலையில் ‘‘மாநில தகவல் கட்டுப்பட்டு மைய அலுவலர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியால்தான் இந்த புயலை எதிர்கொள்ள முடிந்தது’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அரசு அலு வலர்களை பாராட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x