சென்னையில் அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை கட்டாயம் விடுமுறை: ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னையில் அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதன்கிழமை கட்டாயம் விடுமுறை: ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (புதன்கிழமை) கட்டாயம் விடுமுறை அளிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியை முன்னிட்டு புதன்கிழமை தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இந்த ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறைப் பட்டியலிலும் மிலாடி நபி விடுமுறை இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்ன மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், ''நாளை (21.11.18) தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தமிழக கடற்கறையில் புதிய வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்று (20.11.18) மாலையிலிருந்து மிதமானது முதல் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in