

புயலால் நாகை மாவட்டத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங் கள் முறிந்து கிடக்கும் நிலையில் அறுந்துகிடக்கும் மின்கம்பிகள் சீரமைக்கப்படவில்லை.
தென்னந்தோப்புகளில் முறிந் தும் சாய்ந்தும் கிடக்கும் தென்னை மரங்களை அகற்ற ஆட்கள் கிடைக் காமல் விவசாயிகள் தவிக்கின்ற னர். எங்கள் நிலைதான் இவ்வாறு என்றால், மின்கம்பங்களைச் சீர மைக்க மின்வாரியத்தினர் இன்னும் வரவில்லை என தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்தனர்.
5 நாட்களாகியும் சீரமைக்கப் படாமல் உள்ள ஒரு மின்கம்பம். அதனுடன் உள்ள மின்கம்பிகளை யும் பொதுமக்கள்தான் இழுத்து ஓரமாக கட்டியுள்ளனர். திடீரென மின்சாரம் விநியோகிக்கப்பட்டால் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தென்னந்தோப் பில் நுழைவதற்குகூட அஞ்சுகின்ற னர் விவசாயிகள்.
விவசாயிகள் சிலர் கூறிய போது, "மின் கம்பங்களை மாற்ற, மின் கம்பிகளைச் சீரமைக்க இன் னும் ஊழியர்கள் வரவில்லை. தாலுகா அளவிலான அதிகாரிகளா வது வந்து பார்வையிட்டு பணிக ளில் கூடுதல் கவனம் செலுத்தினால் தான் மின்சாரம் இன்றி மக்கள் படும் அவதிகள் தீரும்" என்றனர்.