Published : 24 Nov 2018 09:21 AM
Last Updated : 24 Nov 2018 09:21 AM

சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை

‘கஜா’ புயலால் சேதமடைந்த மின்சாதனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 நாட்கள் சம்பளத்தை வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

‘கஜா’ புயலால் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, மின்கட்டமைப்புகள் சீர்குலைந்து போயுள்ளன.

இதன்படி, உயரழுத்த மின்கம் பங்கள் 27,756-ம், தாழ்வழுத்த மின்கம்பங்கள் 79,112 என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயி ரத்து 868 கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

அதேபோல், 876 மின்மாற்றி களும், 4,286 கிமீ தூரமுள்ள மின்கம்பிகளும், 201 துணைமின் நிலையங்களும் சேதம் அடைந் துள்ளன. சீரமைப்புப் பணிகளில் 21,500 மின் ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர்.

தினமும் ரூ.100 படி

அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அத் துடன், ஒவ் வொரு ஊழியருக்கும் தினசரி செலவுகளுக்காக ரூ.100 படி வழங்க வேண்டும். சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் களுக்கு அவர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நாளுக்கும் 3 நாட் கள் ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் களுக்கு தினசரி கூலியாக ரூ.1,000 வழங்க வேண்டும்.

ஜேசிபி இயந்திரம், உபகரணங் களை எடுத்துச் செல்வதற்கான வாகனங்களுக்கான வாடகைக் கட்டணங்களை உடனே தர வேண் டும் என மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x