Published : 28 Nov 2018 09:34 AM
Last Updated : 28 Nov 2018 09:34 AM

போலீஸாரின் பணியைப் போற்றி வாக்கி-டாக்கியில் கவிதை வாசித்த காவல் ஆய்வாளர்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

சென்னை

போலீஸாருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வாக்கி- டாக்கியில் கவிதை வாசித்த காவல் ஆய்வாளர் கணேசனை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சென்னை மாநகர போலீஸார் கடந்த 24-ம் தேதி இரவு வழக்கம்போல இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூய தமிழில் கவிதை ஒன்று வாக்கி-டாக்கி வழியே வந்தது. போலீஸாரின் பணிகளை பாராட்டியும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அந்தக் கவிதை இருந்தது. இதைக் கேட்டுக்கொண்டி ருந்த இரவுப் பணி போலீ |ஸாருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

பின்னர், வாக்கி-டாக்கியில் தைரியமாக கவிதையை வாசித்தது யார் என்று விசாரித்ததில், சென்னை உயர் நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசன்தான் இந்த கவிதை படித்தவர் என்பது தெரியவந்தது. அன்றைய தினத்தில் இரவுப் பணியில் இருந்த துணை ஆணையர் ஜெயலட்சுமியும் இந்தக் கவிதையை கேட்டுள்ளார். கணேசன் கவிதை வசித்து முடித்ததும் வாக்கி-டாக்கி தொடர்பில் வந்த துணை ஆணையர், கணேசனை வெகுவாக பாராட்டினார்.

மக்களை காக்கும் காவலா

அந்தக் கவிதை இதுதான்:

‘‘குடும்ப வாழ்வில் இனி மையை துறப்பாய், குழந்தை களின் மழலை மொழி மறந்துபோகும், மனையாளை யும் துறந்து வாடுவாய், பாசம் கொண்ட உற்றார் உறவினர்களையும் மறப்பாய், பண்பான காவல் பணியின் கடமையை செய்தால் பலன் தானாக வருமடா. முறுக்கு மீசையும், மிடுக்கு நடையும் காவலனுக்கு மட்டுமே சிறப்படா. நீ உடுக்கும் உடை யும், உறவாடும் முறையும் மக்களிடத்தில் உன் மாண்பை சொல்லும். மகராசன் நீ என்று மக்கள் உள்ளம் உன்னை போற்றும். செய்வதை திருந்த செய்யடா. உன் நல்ல செய லால் உன் வாழ்வும் உயரும் என்பது மெய்யடா, மக்களை காக்கும் காவலா, நீ மட்டுமே கடமை வீரனடா” என்பதுதான்

இந்நிலையில், கணேசனின் கவிதையும் அதைப்பாராட்டிய துணை ஆணையரின் ஆடியோ வும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவ, இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x